முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு வைகை உள்ளிட்ட 3 அணைகளை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

வெள்ளிக்கிழமை, 19 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : வைகை, பெரியகுளம் மஞ்சளாறு மற்றும் பழனி பாலாறு பொருந்தலாறு உள்ளிட்ட மூன்று அணைகளை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

வைகை அணை திறப்பு

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலுள்ள பெரியாறு பிரதானபாசன பகுதிகளில் கடந்த ஏழு ஆண்டுகளாக போதிய மழை இல்லாதகாரணத்தினால் நிலத்தடி நீர் கிடைக்கப் பெறவில்லை என்றும் குடிநீர் தேவைக்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறும் வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, மதுரை மற்றும் சிவகங்கைமாவட்டங்களிலுள்ள பெரியாறு நீட்டிப்பு பாசன பகுதிகளுக்கு குடிநீர்த் தேவைக்காக மொத்தம் 345.60 மி.க. அடிக்கு மிகாமல் வைகை அணையிலிருந்து வினாடிக்கு 200 கஅடி வீதம் 22-ம் தேதி முதல் 20 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

பாலாறு பொருந்தலாறு

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து தாடாகுளம் முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து வரும் 24-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 2-ம் தேதி வரை தாடாகுளம் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 844 ஏக்கர் நிலங்கள்பாசன வசதி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஞ்சளாறு அணை

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம், தேவதானப்பட்டி கிராமத்தில் உள்ள மஞ்சளாறு அணையிலிருந்து முதல் போக சாகுபடிக்கு 24ம் தேதி முதல்143 நாட்களுக்கு பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு அக்டோபர் 24 முதல் டிசம்பர் 15 வரை 60 க.அடி/வினாடி வீதமும், டிசம்பர் 16 முதல் ஜனவரி 31 வரை 50 க.அடி/வினாடி வீதமும், பிப்ரவரி 1 முதல் மார்ச் 15 வரை 45 க.அடி/வினாடி வீதமும், புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு அக்டோபர் 24 முதல் நவம்பர் 30 வரை 40 க.அடி/வினாடி வீதமும், டிசம்பர் 1 முதல் பிப்ரவரி 28 வரை 30 க.அடி /வினாடி வீதமும், மார்ச் 1 முதல் மார்ச் 15 வரை 20 க.அடி /வினாடி வீதமும், ஆக மொத்தம் 1035.50 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படும். இதனால், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பழையஆயக்கட்டு 3386 ஏக்கர் மற்றும் புதிய ஆயக்கட்டு 1873 ஏக்கர், ஆக மொத்தம்5259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாகபயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து