முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் மைக்குமார் அல்ல, மைக் டைசன் தினகரனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

வெள்ளிக்கிழமை, 19 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தான் மைக்குமார் அல்ல, மைக்டைசன் என்று டி.டி.வி. தினகரனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.

தேர்தல் வராது...

சென்னை மூலக்கொத்தளத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. 47-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சி மக்களுக்காக பாடுபடுகின்ற ஆட்சியாகும். ஆனால் இந்த ஆட்சியை மு.க.ஸ்டாலின் குறை கூறுகிறார். முதல்வர் கனவில் மு.க. ஸ்டாலின் தூக்கம் இல்லாமல் தவிக்கிறார். 2019-ம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு மட்டுமே தேர்தல் வரும். தமிழக சட்டசபைக்கு தேர்தல் வராது. என்னை ‘மைக்குமார்’ என்று டிடி.வி.தினகரன் கூறி இருக்கிறார். என்னை பொறுத்தவரை ‘மைக்’ முன்னாடி பேசுவது தவறா ? தவறே கிடையாது. ஆனால் அவருக்கு நான் சொல்லிக் கொள்கிறேன். நான் ‘மைக்குமார் அல்ல, மைக்டைசன். மைக்டைசன் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா? அவர் மாதிரி நாங்க அடிச்சா ‘நாக் அவுட் தான்’ அந்த மாதிரி அடிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

நாக்அவுட் பண்ணுகிறேன்

நிருபர்கள் அவரிடம் ‘நீங்கள்தான் மைக்டைசனா? என்று கேட்டனர். அதற்கு அவர், நான் பாக்சிங் செய்வேன். வேண்டுமானால் மோதிப் பார்க்க வாருங்கள். இங்கேயே மேடை உள்ளது. நான் எப்படி நாக்அவுட் பண்ணுகிறேன், எப்படி பஞ்ச் செய்கிறேன் என்று நீங்கள் பாருங்கள். இப்போது கூட ‘பாக்சிங்’ செய்து உங்களை ஜெயிக்க முடியும். இவ்வாறு சிரித்தப்படி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து