முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெறிச்சோடி கிடந்த கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண் - ஜப்பான் ஷிகொக்கு தீவில் திரளும் சுற்றுலா பயணிகள்

சனிக்கிழமை, 20 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

ஷிகொக்கு : ஜப்பான் நாட்டில் உள்ள ஒரு தீவுதான் ஷிகொக்கு என்பது. இந்த தீவில் நகோரோ என்ற கிராமம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் அந்த கிராமத்தை விட்டு சென்ற அயனோ சுகிமி என்ற 67 வயது பெண்மணிக்கு தனது கிராமத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது.  இதையடுத்து தனது கிராமத்துக்கு சென்ற சுகிமி, கிராமம் வெறிச்சோடி கிடந்ததை கண்டு வேதனையடைந்தார். ஆள் அரவம் இல்லாத தன் கிராமத்தை பார்க்க சுகிமிக்கு பிடிக்கவே இல்லை. அதனால் ஒரு முடிவுக்கு வந்தார்.

கிராமத்தில் பார்த்த மனித உருவங்களை மனதில் வைத்துக் கொண்டே நிறைய பொம்மைகளை தயார் செய்ய தொடங்கினார். அதற்கு அழகழகாக முகங்களை செதுக்கினார். கலர் கலராக ஆடைகளை உடுத்தி விட்டார். அதோடு விடவில்லை. பொம்மையிலேயே பஸ் ஸ்டாப் ரெடி ஆனது. மார்க்கெட் தயாராகி விட்டது. பஸ் ஸ்டாப், மார்க்கெட்டுகளை சாலை ஓரங்களில் கொண்டு போய் வைத்தார். மனித பொம்மைகளையும் ஆங்காங்கே நிற்க வைத்தார்.

கிட்டத்தட்ட தான் பார்த்த கிராமம் போலவே இருந்தது. ஆனாலும் என்னவோ ஒரு குறை சுகிமிக்கு இருந்து கொண்டே இருந்தது. அது வேறொன்றுமில்லை.. பள்ளிக்கூடம்தான்! அப்போது கிராமத்தில் பள்ளிக்கூடம் இருந்திருக்கிறது. ஆனால் பிள்ளைகள் இல்லாததால் மூடப்பட்டிருந்தது. அதனால் சுகிமி பொம்மை மாணவர்களை தயார் செய்தார். மாணவர்கள் படிப்பது போல, டீச்சர் பாடம் நடத்துவதுபோல என தயார் செய்யப்பட்ட பொம்மைகளை அந்த பள்ளி அறைக்குள் கொண்டு போய் வைத்தார். இப்போதுதான் சுகிமிக்கு திருப்தியானது.

மொத்தம் 350 பொம்மை இதுபோல செய்திருக்கிறார் சுகிமி. இப்போது அந்த கிராமத்தில் இந்த பொம்மைகள்தான் சுகிமிக்கு மனிதர்கள். வெறிச்சோடிய கிராமத்தை தன் கை வண்ணத்தால் பொம்மைகளை உலவ விட்டு உயிரூட்டி வருகிறார். இப்போது 29 உயிருள்ள மக்கள் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள் இந்த கிராமத்தில். இதில் சுகிமியும் ஒருவர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், மக்களே இல்லாத இந்த கிராமத்தை பொம்மையால் அலங்கரித்த விஷயத்தை கேள்விப்பட்டு, சுற்றுலா பயணிகள் இந்த கிராமத்துக்கு வர துவங்கி விட்டார்களாம். அதனால் கிராமமே கூட்டத்தில் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறதாம்.. இதை பார்க்க பார்க்க சுகுமி இரட்டிப்பு சந்தோஷம் அடைந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து