முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலைக்கு கணவருடன் சென்ற திருச்சி பெண்ணால் பதட்டம் - ஆதார் மூலம் முடிவுக்கு வந்தது வயது சர்ச்சை

சனிக்கிழமை, 20 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு திருச்சியைச் சேர்ந்த பெண் ஒருவரின் வயது 50 என சர்ச்சை எழுந்ததால் பக்தர்கள் அவரை வழிமறித்து தடுத்தனர். இதையடுத்து அந்த பெண்ணின் ஆதார் அட்டை மூலம் சர்ச்சை முடிவுக்கு வந்தது.

சபரிமலைக்கு அனைத்து பெண்களும்செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக கேரள மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் ஐதராபாத்தை சேர்ந்த பெண் பத்திரிகையாளர், கொச்சியைச் சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் ஆகியோர் சபரிமலைக்குச் செல்ல முயன்றனர். சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் வந்தால், கோயில் கதவை பூட்டுவோம் என்று தந்திரி தெரிவித்ததால், பதட்டம் ஏற்பட்டதையடுத்து அந்த இரு பெண்களும் மலையில் இருந்து கீழே இறக்கப்பட்டனர்.

சபரிமலையில் நேற்று பெண்கள் வராமல் தடுக்கும் வகையில் பக்தர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் சபரிமலைக்கு நேற்று சில பெண்கள் செல்ல முற்படுவதாக தகவல் வெளியானது. இதனால் பக்தர்கள் பதற்றம் அடைந்தனர். அப்போது பம்பையில் இருந்து சென்ற பெண் ஒருவருக்கு 50 வயதுக்கும் குறைவாக இருப்பதாக கூறி பக்தர்கள் சிலர் அவரை வழிமறித்தனர். இதையடுத்து அங்கு ஏராளமான பக்தர்கள் கூடி அவர் கோயிலுக்குள் செல்லக் கூடாது எனக் கூறி தடுத்தனர்.

ஆனால் தனக்கு 52 வயது ஆவதாக அந்த பெண் கூறினார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். அந்த பெண்ணுடன், அவரது கணவரும் உடன் வந்திருந்தார். அவர், தனது மனைவியின் ஆதார் அட்டையை காண்பித்தார். அதில் அவரது வயது 52 என குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும், அந்த பெண் திருச்சியைச் சேர்ந்த லதா என்றும், அவர் கல்லூரி பேராசிரியராகவும் அதில் தகவல்கள் இடம் பெற்று இருந்தன. இதையடுத்த அந்த பெண்ணை தடுத்த பக்தர்கள் மன்னிப்பு கோரினர். மேலும் அவர் தொடர்ந்து சபரிமலை கோயிலுக்கு செல்ல அனுமதித்து உதவினர். இதனால் சபரிமலையில் சிறிது நேரம் ஏற்பட்ட பதட்டம் தணிந்தது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து