முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசியான், அமெரிக்க பாதுகாப்பு மந்திரிகளுடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

சனிக்கிழமை, 20 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : சிங்கப்பூருக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அங்கு அமெரிக்கா மற்றும் ஆசியான் நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்களைச் சந்தித்துப் பேசினார்.

 ஆசியான் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் நிலையிலான மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. அதில், அமெரிக்கா,ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், நியூஸிலாந்து, தென் கொரியா, ரஷியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நிர்மலா சீதாராமன் சிங்கப்பூருக்கு  சென்றார். மாநாட்டின் ஒரு பகுதியாக பிற நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். குறிப்பாக, அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸை நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார். அப்போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அவர்கள் இருவரும் விவாதித்தனர்.

ரஷியா மீது அமெரிக்கா பொருளதாரத் தடை விதித்துள்ள நிலையில், அந்நாட்டிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளை இந்தியா கொள்முதல் செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டது. இது இந்திய - அமெரிக்க உறவில் சில சங்கடங்களை ஏற்படுத்தக் கூடும் என செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், இரு நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர்களும் சந்தித்துப் பேசியிருப்பது சர்வதேச அளவில் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. சில நிமிடங்கள் நீடித்த அந்தச் சந்திப்பில் ரஷிய விவகாரம் பேசப்பட்டதா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இதைத் தவிர, மலேசிய அமைச்சர் முகமது பின் சாபு, ஆஸ்திரேலிய அமைச்சர் கிரிஸ்டோபர் பைன், பிலிப்பின்ஸ் அமைச்சர் டெல்ஃபின் லோரன்ஸானா, வியத்நாம் அமைச்சர் கோ சுவான் லிச் உள்ளிட்டோரையும் நிர்மலா சீதாராமன் சந்தித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து