முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளழகருக்கு நூபுரகங்கையில் தைலக்காப்பு திருவிழா.

ஞாயிற்றுக்கிழமை, 21 அக்டோபர் 2018      மதுரை
Image Unavailable

  அழகர்கோவில், - திருமாலிருஞ்சோலை தென்திருப்பதி என்றும்,  108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானதுமான மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இக்கோவில்  நடைபெறும் திருவிழாக்களில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம்  நடைபெறும் தைலக்காப்பு திருவிழாவும் ஒன்றாகும். இதையொட்டி கடந்த 19ம் தேதி இரவு நவநீத கிருஷ்ணன் சன்னதி மண்டபத்தில் பரமபத நாத சேவை நடந்தது. மறுநாள் 20ம் தேதி  மாலையில் சீராப்தி நாதன் சேவையும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 21ம் தேதி நேற்று காலையில் கள்ளழக பெருமாள் அலங்கார பல்லக்கில், இருப்பிடத்திலிருந்து எழுந்தருளி மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் அழகர்மலை உச்சிக்கு சென்றார். செல்லும் வழியில் அனுமான், கருடன்  ஆகிய தீர்த்த எல்கை பகுதிகளில் பெருமாளுக்கு விசேஷ பூஜைகளும், தீபாரதனையும் நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமி புறப்பாடாகி நூபுரகங்கைக்கு சென்றார்.
 அங்கு மண்டபம் முழுவதும் பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்குள்ள மாதவி மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். திருத்தைலக்காப்பு பெருமாளுக்கு சாத்தப்பட்டது. அதை தொடர்ந்து பிரசித்தி பெற்ற நூபுரகங்கை தீர்த்தத்தில் கள்ளழகர் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் மணி கணக்கில் பெருமாள் நீராடினார். கள்ளழர் பெருமாளே அழகர்மலை உச்சிக்கு சென்று அங்குள்ள நூபுர கங்கையில் நீராடி வருவது தனி சிறப்பாகும்.
பின்னர் அதே மண்டபத்திற்கு சென்ற சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், தீப ஆராதனைகளும் நடந்தது. இங்கு சுவாமி இராஜாங்க திருகோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து வந்த வழியாகவே சென்ற பெருமாள் மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோவிலுக்கு சென்று இருப்பிடம் சேர்ந்தார். முன்னதாக இந்த திருவிழாவையொட்டி நூபுரகங்கையில் பக்தர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து