முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.பி. சட்டசபை தேர்தலில் காது கேட்காத, வாய் பேச முடியாத சென்னை வாலிபர் போட்டியிட விருப்பம்

திங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர்,சென்னையில் படித்த காது கேட்காத, வாய் பேச முடியாத முன்னாள் ஐ.டி. பணியாளர் ஒருவர் மத்தியப் பிரதேசத்தில் நடைபெற உள்ள மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் எம்.எஸ்.சி.படித்தவர் சுதீப் சுக்லா. படிப்பை முடித்த சுக்லா இன்போசிஸ் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். அங்கு ரூ.ஒரு லட்சம் ஊதியம் பெற்று வந்த நிலையில் தேர்தலில் போட்டியிட்டு சமூக சேவை செய்யும் நோக்கில் வேலையைத் துறந்தார் சுக்லா.இதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தின் சாத்னா தொகுதியில் போட்டியிட சுக்லா விருப்பம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகப் பேசிய அவர், நான் நாட்டுக்காக சேவை செய்ய ஆசைப்படுகிறேன். அதனால் எனக்கு வாய்ப்புக் கொடுங்கள். அரசியல்வாதிகள் ஏராளமான வாக்குறுதிகளை அளிக்கிறார்கள். ஆனால் தேர்தலுக்குப் பிறகு அவற்றை மறந்து விடுகிறார்கள் என்றார்.

சுக்லாவின் மனைவியும் மாற்றுத் திறனாளிதான். காது கேட்காத, வாய் பேச முடியாத அவர் பெங்களூருவில் பணியாற்றுகிறார். அவரின் சம்பளத்தில் குடும்பத்தை நடத்துவதாக சுக்லா தெரிவித்துள்ளார். சுதீப் சுக்லா தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறும் பட்சத்தில் நாட்டிலேயே முதல் முறையாக காது கேட்காத, வாய் பேச முடியாத தேர்வு செய்யப்படும் எம்.எல்.ஏ.வாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து