முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல்வாதிகளுடனும், டோக்கன் கட்சியுடனும் கூட்டணி என நாங்கள் சொல்லவே இல்லை சென்னையில் தமிழிசை ஆவசே பேட்டி

திங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,காங்கிரஸ் கட்சியுடன் யார் இணைந்தாலும் அந்த கூட்டணி மூழ்கிப்போகும் எனவும், இனிவரும் எந்த தேர்தலிலும் காங்கிரஸ் தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே தோல்வியில் உள்ள கட்சி. இந்த நிலையில், ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் காங்கிரஸின் தோல்வி உறுதி செய்யப்பட்டுவிடும். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் சரியாக செயல்படாமல் தோல்வியடைந்தவர் ராகுல்காந்தி. பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை நிறுத்தினால் கடந்த முறை கிடைத்த 40 இடங்களும் கிடைக்காமல் போய்விடும். ராகுல்காந்தியை மக்களும் கூட்டணி கட்சிகளும் மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சியே ஏற்றுக்கொள்ளாது.

காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே மூழ்கும் கப்பலாகத்தான் உள்ளது. அதனால், காங்கிரசுடன் யார் கூட்டணி வைத்தாலும் அவர்கள் மூழ்கித்தான் போவார்கள். இனி வரப்போவது நாடாளுமன்ற தேர்தல். இந்த தேர்தலில் காங்கிரஸின் தாக்கம் இருக்கவே இருக்காது. வரும் 5 மாநில தேர்தலிலேயே இதனை பார்க்கலாம். இந்த 5 மாநில தேர்தலிலேயே காங்கிரஸ் கூறியபடி மெகா கூட்டணியை அமைக்க முடியவில்லை. அதனால், இப்போது செய்ய முடியவில்லையென்றால், நாடாளுமன்ற தேர்தலிலும் அதனை அமைக்கவே முடியாது. அதனால், அனுபவம் வாய்ந்த ஒவ்வொரு கட்சிக்கும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் நிச்சயமாக தோல்விதான் என்பது தெரியும்.

பா.ஜ.க. நாடாளுமன்ற தேர்தலுக்கு 6 மாதம் முன்பிலிருந்தே தயாராகி வருகிறோம். பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறோம். தமிழகத்தில் பா.ஜ.க. பலம் பொருந்திய கட்சியாக உள்ளது. மதவாத சக்திகளுடன் கூட்டணி இல்லை என்றிருக்கிறார் டிடிவி தினகரன். நாங்கள் ஊழல்வாதிகளுடனும், 20 ரூபாய் டோக்கன் கட்சியுடனும் கூட்டணி என சொன்னோமா? நீங்கள் என்ன எங்களை நிராகரிப்பது? நாங்கள் யாருடனும் கூட்டணி குறித்து பேசவில்லை. 22 மாநிலங்களை பா.ஜ.க. ஆட்சி செய்கிறது. நாங்கள் சாதாரண கட்சி அல்ல. மீண்டும் பா.ஜ.க ஆட்சியமைக்கும். தமிழகத்திலும் கணிசமான இடங்களில் வெற்றிபெறுவோம் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து