முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீர்காழி சத்குரு ஒளி லாய பீடத்தில் சிவ தாண்டவம் ஆடிய வெளிநாட்டவர்

செவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சீர்காழி,சீர்காழி அருகே காரைமேடு என்ற இடத்தில் சத்குரு ஒளி லாயம் பீடம் ஒன்று இருக்கிறது. இங்கு 18 சித்தர்களுக்கும் தனித்தனியாக கோயிலும் உள்ளது. இந்த கோயிலில் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். குறிப்பாக பவுர்ணமிகளில் உலக நன்மை வேண்டிசிறப்பு வழிபாடுகள் நடக்கும்.

இந்த சிறப்பு பூஜைகளை நாடி ராஜேந்திரா சுவாமிகள் நடத்தி வருகிறார். அங்கு வெளிமாநிலத்தவர் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சமீபத்தில் சீன காதலர்கள் இரண்டு பேர் இந்த கோயிலை சுற்றி பார்த்து விட்டு அவர்களுக்கு மிகவும் பிடித்து போய் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திருமணம் செய்து கொண்டனர். அந்த அளவுக்கு வெளிநாட்டினரை ஈர்த்து வருகிறது.இந்நிலையில் கோயிலுக்குள் இடியென முழங்கும் சத்தத்துடன் வெளிநாட்டவர் சிலர் சிவதாண்டம் ஆடிக் கொண்டிருந்தனர். அமெரிக்கா, ஹாலந்து, சீனா, பிலிப்பைன்ஸ் என பல்வேறு நாட்டினை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து இந்த சிவதாண்டவத்தை ஆடி கொண்டிருந்தனர்.

பல்வேறு நாட்டிலிருந்து ஒளி லாயம் வந்த இவர்கள் முன்னதாக, விநாயகர், சிவன், சன்னதிகளில் சிறப்பு வழிபாடுகள் செய்தனர். அதன்பிறகுதான் அனைவரும் சிவன் சன்னதி முன்பு சிவதாண்டவ நடனம் ஆடினார்கள்.உடல் முழுவதும் பட்டை பட்டையாக திருநீரு அணிந்து பக்தி மயமாக காட்சியளித்த இவர்களை கண்ட அங்கிருந்த பக்தர்கள் அனைவரும் பரவசத்தில் மூழ்கினர். மேலும் பொதுமக்களும் திரண்டு வந்து இந்த வெளிநாட்டினர் ஆடிய சிவதாண்டவத்தை பார்த்து ரசித்து வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து