முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீ டூ விவகாரம்: அர்ஜூனுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் இரு பிரிவுகளாகத் திரண்ட கன்னட நடிகர்கள் சங்கம்

செவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2018      சினிமா
Image Unavailable

சென்னை,மீ டூ பிரச்சினையில் அர்ஜுனுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் இருவேறு முனைகளில் கன்னட நடிகர்கள் சங்கம் செயல்படத் தொடங்கியுள்ளது.

தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துவரும் ஸ்ருதி ஹரிஹரன் நடிகர் அர்ஜுனுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டைத் தெரிவித்திருந்தார். நடிகை ஸ்ருதிக்கு ஆதரவாக நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் இருந்த போதிலும், அவர் குற்றம் சாட்டிய நடிகர் அர்ஜுன் மீதான இக்குற்றச்சாட்டு ''பொருத்தமற்றது'' என்றும் அவர் நடத்தை மீது பாலியல் வண்ணம் பூசப்படுவதாகவும் கன்னட திரைப்படத்துறையின் இன்னொரு பிரிவு கூறி வருகிறது.குறிப்பாக கர்நாடகா திரைப்பட நடிகர்கள் சங்கம் உள்ளிட்ட சினிமா அமைப்புகள், அர்ஜுன் பின்னால் நிற்கின்றன.சில மூத்த நடிகர்கள் அர்ஜுனுக்காக உறுதியளித்துள்ளனர். அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு முன் இருமுறை யோசித்துப் பார்த்திருக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.அதேநேரம், புதிய நடிகர்கள் ''பெண்களை யாராவது பாலியல் தொல்லைகள் செய்தால் அதைப் பார்த்துக்கொணடு அமைதியாக இருக்க வேண்டுமா'' எனக் கேட்கிறார்கள்.

நடிகர் அர்ஜூனின் மாமனாரும் மூத்த கன்னட நடிகருமான ராஜேஷ், கர்நாடகா திரைப்பட வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் எஸ்.ஏ.சின்னே கவுடாவைச் சந்தித்து நடிகை ஸ்ருதிக்கு எதிராகப் புகார் ஒன்றை அளித்தார்.கர்நாடக திரைப்படத் துறைக்கு ஒரு குடையாக இருந்து செயல்படும் கர்நாடக திரைப்பட வர்த்தக சம்மேளனம் நேற்று இப்பிரச்சினையில் தலையிட்டு சமரசம் செய்ய முற்பட்டது. அர்ஜூனின் மாமனாரும் கன்னடத்தின் மூத்த நடிகருமான ராஜேஷ் நடிகை ஸ்ருதி ஹரிஹரனுக்கு எதிராகப் புகார் தெரிவித்தார். தனது மருமகனுக்கு எதிரான அவதூறுக்கு நீதி கிடைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து