முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று 2-வது ஒரு நாள் போட்டி : மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக மீண்டும் அசத்துமா இந்திய அணி ?

செவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

விசாகப்பட்டினம்,இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. இதில் இந்திய அணி மீண்டும் வெற்றிப் பெற்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுமா ? என்று ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் ஒருநாள் போட்டி...வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட வந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டி, அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்தது. முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஹெட்மையர் சதமடித்தார். அவர் 79 பந்துகளில் 106 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்காரர் பாவெல் 51 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் சேஹல் 3 விக்கெட்டும், முகமது ஷமி, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். கலீல் அகமது ஒரு விக்கெட் எடுத்தார்.

கோலி - ரோகித் சதம்...பின்னர் களமிறங்கிய இந்திய அணி, 42.1 ஓவரிலேயே ஒரு விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 117 பந்துகளில், 15 பவுண்டரி, 8 சிக்சருடன் 152 ரன்களும் கேப்டன் விராத் கோலி 107 பந்துகளில் 21 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 140 ரன்களும் எடுத்தனர். விராத் கோலிக்கு இது 36 வது சதம். ரோகித் சர்மாவுக்கு 20வது சதம் ஆகும். அம்பத்தி ராயுடு 22 ரன்கள் எடுத்தார். ஆட்ட நாயகன் விருது விராத் கோலிக்கு வழங்கப்பட்டது.

இன்று 2-வது ஒருநாள்...இந்தப் போட்டியில் விராத் கோலி அடித்த சதம் சர்வதேசப் போட்டிகளில் அவர் அடிக்கும் 60-வது சதமாகும். ஒருநாள் போட்டியில் 36, டெஸ்ட் போட்டியில் 24 சதம் அடித்துள்ளார். மேலும், 60 சதங்களை மிகவும் விரைவாக எட்டிய வீரர் எனும் பெருமையை கோலி படைத்தார். ஏறக்குறைய 386 இன்னிங்ஸில் கோலி இந்தசாதனையை செய்திருக்கிறார். சச்சின் 424 இன்னிங்ஸில் இந்த சாதனையை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது.

சாதகமாக இருக்கும்...கவுகாத்தி ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் பந்துவீச்சு எடுபடவில்லை. முக்கிய பந்துவீச்சாளர்களாக புவனேஷ்வர்குமாரும் பும்ராவும் இல்லாததன் பாதிப்பு தெரிந்தது. உமேஷ் யாதவ்வும் முகமது ஷமியும் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தனர். மிடில் ஆர்டரில் ஜடேஜாவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. விசாகப்பட்டினம் ஆடுகளமும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கலீல் அகமது நீக்கப்பட்டு கடந்த போட்டியில் விளையாடாத குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். 

மே.இ.தீவுகள் அணியில்...வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கீரன் பாவெல், ஹெட்மையர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். கடந்த போட்டியில் டக் அவுட் ஆன, அனுபவ வீரர் சாமுவேல்ஸ் இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கலாம். 2-வது ஒருநாள் போட்டி இன்று பகல் 1.30 மணிக்குத் தொடங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து