முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாங்க முடியாத கோபம்: அமெரிக்க உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கத்தை கழுத்தை இறுக்கி கொன்ற பெண் சிங்கம்

புதன்கிழமை, 24 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

இண்டியானாபோலிஸ் : அமெரிக்காவில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் ஒரு சிங்க ஜோடி இருந்தது. 8 வருஷமாக இந்த பூங்காவில் உள்ள இந்த ஜோடியில்  ஆண் சிங்கம் பெயர் நியாக்(10). பெண் சிங்கம் பெயர் ஜூரி(12). இந்த ஜோடிக்கு 3 குட்டிகள் உள்ளன.

சில மாதங்களாகவே இந்த ஜோடிகளுக்குள் சண்டை நிலவி வந்தது.  எவ்வளவு சண்டை போட்டுக்கிட்டாலும் ரெண்டுமே ஒரே கூண்டில்தான் இந்த சிங்கங்கள் இருக்கும்.

சம்பவத்தன்று கூண்டுக்குள்ளிருந்து வந்த வித்தியாசமான கர்ஜனை சத்தத்தை கேட்ட  அங்கிருந்த ஊழியர் ஒருவர் ஓடிச் சென்று பார்த்த போது பெண் சிங்கம், ஆண் சிங்கத்தின் கழுத்தை இறுக்கிப் பிடித்திருந்தது. இரு சிங்கங்களையும் பிரித்து விட பல முயற்சிகள் நடந்தது. ஆனால் பெண் சிங்கம் ஆண் சிங்கத்தை விடவே இல்லை. கெட்டியாக கழுத்தை பிடித்து கொண்டது. இதில் ஆண் சிங்கம் நியாக்கிற்கு மூச்சு திணறி கடைசியில் ஜூரியிடம் தப்ப முடியாமல் ஆண் சிங்கம் நியாக் இறந்தே விட்டது.

இதுபற்றி பூங்கா ஊழியர்கள் கூறும்போது, நியாக் ரொம்ப நல்ல டைப் என்கிறார்கள். அற்புதமான சிங்கமாம். எவ்வளவோ தடுத்தும் எங்களால் நியாக்கை காப்பாற்ற முடியாமல், இப்படி இழந்து விட்டு நிற்கிறோம். இதனால் பூங்காவே சோகத்தில் உள்ளது என்று தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து