முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் அதிபர்கள் கிளிண்டன், ஒபாமாவுக்கு வெடிகுண்டு பார்சல் டிரம்ப் கண்டனம் - விசாரணைக்கு உத்தரவு

வியாழக்கிழமை, 25 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,முன்னாள் அதிபர்கள் கிளிண்டன், ஒபாமா வீடுகளுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பப்பட்ட சம்பவத்திற்கு டொனால்டு டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பார்சலில் வெடிகுண்டு...அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் மற்றும் முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் தம்பதியின் வீடு நியூயார்க் நகரின் புறநகர் பகுதியான சப்பாக்குவாவில் உள்ளது. மற்றொரு முன்னாள் ஜனாதிபதியான ஒபாமாவின் வீடு வாஷிங்டனில் உள்ளது. இவர்களுக்கு நாள்தோறும் வரும் கடிதங்கள் மற்றும் பார்சல்களை உளவுப்பிரிவு அதிகாரிகள் ஸ்கேன் மூலம் பரிசோதித்து வழங்குவது வழக்கம். அப்படி கிளிண்டன் வீட்டுக்கு வந்த பார்சல்களை பரிசோதித்த போது அதில் ஒரு பார்சலில் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒபாமா வீட்டுக்கு...இதை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், ஒபாமாவின் வீட்டுக்கு வந்த பார்சல் ஒன்றிலும் வெடிகுண்டு இருந்தது தெரியவந்தது. இந்த பார்சல்களை அனுப்பியது யார்? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக உளவுத்துறை மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிரம்ப் கண்டனம்...முன்னாள் அதிபர்கள் கிளிண்டன், ஒபாமா வீடுகளுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பப்பட்ட சம்பவத்திற்கு டொனால்டு டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். வெடிகுண்டு அனுப்பட்டது தொடர்பாக உளவுத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனையை மேற்கொண்டுள்ளார்.

தீவிர விசாரணை...“இப்போது நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும், அமெரிக்காவில் அரசியல் வன்முறை செயல்களுக்கு இடம் கிடையாது என்ற செய்தியை தெளிவாகவும், ஸ்திரமாகவும் தெரிவிக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார். வெடிகுண்டு பார்சல் அனுப்பப்பட்ட விவகாரம் மிகவும் வெறுக்கத்தக்கது எனவும் விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு தீவிர விசாரணையை மேற்கொள்ளும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து