முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜமால் கொலைக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் உறுதி

வியாழக்கிழமை, 25 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

சவுதி,ஜமாலின் மரணத்துக்கு காரணமானவர்கள் நிச்சயம் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்திருக்கிறார்.

நீதியே வெல்லும்...பத்திரிகையாளர் ஜமால் கொலை வழக்கில் துருக்கி வெளியிட்ட ஆதாரங்களின் அடிப்பைடையில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராகப் பல்வேறு தரப்புகளிலிருந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் இது தொடர்பாக  ரியாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பேசும்போது, ”சவுதி மக்கள் அனைவரும் வருந்தும்படி இந்தக் கொலை நடந்துள்ளது. இந்தக் குற்றத்துக்குக் காரணமானவர்கள் நிச்சயம் கடுமையான தண்டனை பெற நான் உறுதியாக இருக்கிறேன்.  நீதியே நிச்சயம் வெல்லும். ஜமாலின் கொலையைப் பயன்படுத்தி துருக்கி, சவுதி இடையே மோதல் ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

சவுதி ஒப்புக்கொண்டது...துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்தில் கொல்லப்பட்ட ஜமாலின் கொலை வழக்கில் தொடர்புடைய சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி கடந்த வாரம்வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை துருக்கி வெளியிட்டது. துருக்கியில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தின் உள்ளே ஜமாலின் விரல்கள் துண்டிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு, பின்னர் அவரது தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாகவும் துருக்கி சமீபத்தில் குற்றம் சாட்டியது. இதனைத் தொடர்ந்து ஜமால் கொல்லப்பட்டதை சவுதி ஒப்புக்கொண்டது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் சவுதிக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து