முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தன் தோழியை அப்பாவுக்கு மணமுடித்து வைத்த மகள்

வெள்ளிக்கிழமை, 26 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

பீனிக்ஸ்,அமெரிக்காவை சேர்ந்த நெருங்கிய தோழிகள் டெய்லர் - அமண்டா. ஒரே இடத்தில்தான் வேலை பார்க்கிறார்கள். அமண்டாவின் தந்தை லெய்மன், மகளின் தோழி டெய்லருக்கு அறிமுகமானார். தந்தை வயது 54, டெய்லர் வயது 27. அறிமுகமான நட்பானது நாளடைவில் காதலானது. இருவரின் காதலும் இரு வீட்டுக்கும் தெரிய வர, இரண்டு வீட்டிலும் யாருமே இதற்கு ஒத்து கொள்ளவில்லை.

ஆனால் அமண்டா மட்டும் தடுமாறினாள். அப்பாவும் வேணும், தோழியும் வேணும். இரண்டு பேரையுமே விட்டு தர முடியவில்லை. ஆனால் காதல் ஜோடி பிடிவாதமாகவே இருந்தார்கள். கடைசியில் அமாண்டா காதலர்களுக்கு பச்சை கொடி காட்டி விட்டார். பிறகு மகளே அப்பாவுக்கு கல்யாணம் செய்து வைத்தார்.இது பற்றி டெய்லர் சொல்லும் போது, என்னவோ தெரியவில்லை, முதல் முதலா பார்த்த போது அவர் என் கண்ணுக்கு அழகா தெரிஞ்சார். வயது வித்தியாசம் எல்லாம் என் கண்ணுக்கு தெரியவே இல்லை. எனக்கு யாரை பத்தியும் கவலை கிடையாது. யார் என்ன சொன்னாலும் காதிலும் போட்டுக் கொள்ள மாட்டேன். என் தோழி அமண்டா என்னை புரிஞ்சிக்கிட்டாள். எனக்கு அதுவே போதும். அதேபோல, புதுமாப்பிள்ளை லெய்மன் சொல்லும் போது, டெய்லர் எனக்கு மனைவியில்லை, பெஸ்ட் பிரண்ட். என் மகள் எங்களை ஏற்று கொண்டதே போதும், எங்களுக்கு யாரை பத்தியும் கவலை இல்லை என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து