முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமலையில் நவம்பர் 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

வெள்ளிக்கிழமை, 26 அக்டோபர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை,திருமலையில் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.
திருப்பதியில் கடந்த 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாள் முதல் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டுக்கு நகராட்சி தடைவிதித்தது. 50 மைக்ரானுக்கும் கீழ் உள்ள பிளாஸ்டிக் கவர்கள், 2 லிட்டருக்கும் குறைவான குடிநீர் பாட்டில்கள், தேனீர், காபி அருந்த பயன்படுத்தும் பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் பூச்சு கொண்ட பேப்பர் கப்புகள் உள்ளிட்டவற்றிற்கு தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில் இதை தொடர்ந்து திருமலையிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்குத் தடை விதிக்க கோரி திருப்பதி நகராட்சி அதிகாரிகள் தேவஸ்தான அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.அதனால் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் திருமலையிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தேவஸ்தானம் தடைவிதிக்க உள்ளது. அதுகுறித்து திருமலையில் உள்ள உணவகம் மற்றும் கடை உரிமையாளர்களிடம்  தேவஸ்தான அதிகாரிகள் கலந்துரையாடினர். அதில் திருமலையில் கற்கண்டு, பேரீச்சம்பழம், கடவுள் படங்கள், பைகள் உள்ளிட்டவை பிளாஸ்டிக் கவர்களால் சுற்றி விற்பனை செய்யப்படுகிறது. இனி அவற்றைத் தவிர்க்க வேண்டும். திருமலையில் உள்ள உணவகங்களிலும் தேநீர், காபி, பால் அருந்துவதற்கு பிளாஸ்டிக்கினால் ஆன கப்புகள், கவர்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது என்று அதிகாரிகள் அவர்களிடையே அறிவுறுத்தினர். திருமலைக்கு வரும் பக்தர்களும் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்ப்பதுடன், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், புற்றுநோயைத் தடுக்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் லட்டுகளை போட்டுத் தரும் கவருக்கு மாற்று ஏற்பாடு செய்யும் வரை லட்டு கவர்களை மட்டும் பயன்படுத்த தேவஸ்தானம் நகராட்சி அதிகாரிகளிடம் அனுமதி கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து