முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

8 மாதங்கள் நகராமல் இருந்தேன்: தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட ஜப்பான் பத்திரிகையாளர் வேதனை

சனிக்கிழமை, 27 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

டோக்கியோ,நான் குளிப்பதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை. நான் சுமார் 8 மாதங்கள் ஒரு மீட்டர் பரப்பளவு, உயரமும் கொண்ட இடத்தில் இருந்தேன். நான் நகர்வதற்கு கூட இடமில்லாமல் இருந்தது என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சிரியா தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்ட ஜப்பான் பத்திரிகையாளர் ஜும்பீ யசூதா வேதனையுடன் தெரிவித்தார்.

சிரியா தீவிரவாதிகளால் உளவாளி என்று கருதப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட ஜப்பான் பத்திரிகையாளர் ஜூம்பீ விடுவிக்கப்பட்டு தனது சொந்த நாட்டுக்கு திரும்பினார். இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளில் அவர் தீவிரவாதிகளின் பிடியில் அனுபவித்த கொடுமைகளை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறும் போது, சுமார் 40 மாதங்கள் சிரியா தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தேன். நான் நகர்வதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டது. துளையின் வழியே வெறும் உணவு மட்டும் வழங்கப்பட்டது. நான் 8 மாதங்கள் வெறும் ஒரு மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் இருந்தேன். நான் இன்னும் கொஞ்ச நாட்கள் அங்கிருந்தால் இறந்திருப்பேன். எனது சொந்த நாட்டுக்கு திரும்பியது மகிழ்ச்சியாக உள்ளது. இருப்பினும் இதனைத் தொடர்ந்து நான் என்ன செய்ய போகிறேன் என்று தெரியவில்லை என்று தெரிவித்தார். ஜூம்பீயின் விடுதலைக்கு துருக்கி மற்றும் கத்தார் அரசுக்கு ஜப்பான் அரசு நன்றி தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து