முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் மீதான பொருளாதார தடை வரும் 5-ம் தேதி முதல் அமல் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

சனிக்கிழமை, 27 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் வரும் 5-ம் தேதி முதல் முழு வீச்சில் அமலுக்கு வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வாஷிங்டனிலுள்ள அதிபர் மாளிகையில் அவர் கூறியதாவது:-ஏற்கெனவே ஈரானுக்கு எதிராக அறிவிக்கப்பட்டிருந்த அனைத்து பொருளாதாரத் தடைகளும், வரும் 5-ம் தேதி முதல் முழு வீச்சில் அமல்படுத்தப்படும். உலகின் மிக அபாயகரமான ஆயுதங்களைப் பெறுவதிலிருந்து ஈரானைத் தடுக்கும் வகையிலேயே இந்தப் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.அந்த நோக்கத்தை நிறைவேற்ற, மேலும் கூடுதலான பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் தயாராக இருக்கிறோம் என்று டிரம்ப் தெரிவித்தார். இது, ஈரானிடமிருந்து பெருமளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியா போன்ற நாடுகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து