முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேஸ்புக்கில் இருந்து 87 லட்சம் குழந்தை நிர்வாணப் படங்கள் நீக்கம்

சனிக்கிழமை, 27 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

சான்பிரான்சிஸ்கோ,பேஸ்புக் சமூகவலைதளத்தில் இருந்து கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 87 லட்சம் குழந்தை நிர்வாணப் படங்கள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் அதிகம் பயன்படுத்தும் முக்கிய சமூகவலைதளப் பக்கமான பேஸ்புக்கில், குழந்தைகளின் நிர்வாணப் படங்கள் அதிகளவில் காணப்படுவதாக புகார் கூறப்பட்டது. காமன்ஸ் ஊடகக்குழுவின் தலைவர் டேமியன் காலின்ஸ், இதற்காக பேஸ்புக் சமூக வலைத்தளத்தை கடுமையாக சாடினார். இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் பேஸ்புக்கில் ரகசிய குழுக்களால் குழந்தைகளின் ஆபாச படங்கள் பகிரப் படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பேஸ்புக் நிறுவனம், சம்பந்தப்பட்ட புகைப்படங்களை நீக்கும் பணியில் ஈடுபட்டது.

இதையடுத்து கடந்த 3 மாதங்களில் 87 லட்சம் குழந்தை நிர்வாண படங்கள் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கென அந்நிறுவனம் புதிதாக ஒரு மென்பொருளையும் உருவாக்கி உள்ளது. அதன் மூலம், பேஸ்புக்கில் எந்தவொரு குழந்தையின் நிர்வாண படங்களோ, ஆபாச படங்களோ பதிவேற்றம் செய்யப்பட்டால், அவை தானாகவே நீக்கப்பட்டு விடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து