முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி 20 போட்டியில் தோனியின் வாழ்வு முடிந்து விட்டதாக அர்த்தமல்ல தேர்வு குழு தலைவர் விளக்கம்

சனிக்கிழமை, 27 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

புனே,மேற்கு இந்திய தீவுகள், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்களிலிருந்து தோனி நீக்கப்பட்டுள்ளது பெரிய துணிச்சலான முடிவு என்பது ஒருபுறமிருக்க, ஆச்சரியகரமான முடிவு என்பதையும் பலரும் தெரிவித்துள்ளனர்.

சமீபகாலங்களாக பந்துகளை தூக்கி அடித்து விறுவிறுவென ரன்களைக் குவிக்கும் திறனை தோனி இழந்து விட்டார். எத்தனை நாட்களுக்குத்தான் அவரிடம் பொறுமை காட்ட முடியும்? எத்தனையோ இளம் வீரர்கள் அவரது கனவு போலவே இந்திய நாட்டுக்காக ஆட வேண்டும் என்று காத்திருக்கின்றனர். மஞ்சள் சீருடையில் ஆடும் போது உள்ள ஆக்ரோஷமும் உணர்வும் அவருக்கு இந்திய அணிக்கு ஆடும்போது இல்லை போலவே அவரது ஆட்டம் நமக்கு உணர்த்துகிறது.
இந்நிலையில் டி20 போட்டிகளுக்கு மட்டும் அவரை தற்காலிகமாக நீக்கியுள்ளதாக தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

தோனி டி20 யின் 6 போட்டிகளுக்கு இல்லை. நாங்கள் 2-வது விக்கெட் கீப்பர் இடத்துக்காக இந்த முடிவை எடுத்துள்ளோம். டி20-ல் தோனியின் வாழ்வு முடிந்து விட்டது என்று அர்த்தமல்ல என்று விளக்கம் அளித்துள்ளார்.  ஆனால் தோனி ரசிகர்கள் ஆவேச ஆதரவு மன நிலையில் இருப்பார்கள். டி20 சர்வதேச போட்டிகளில் தோனி 2 அரைசதங்களை மட்டுமே அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து