முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ வீரர்களை தாக்குபவர்களை தீவிரவாதிகளாகத்தான் நினைப்போம் தலைமை தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 28 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,ராணுவ வீரர்களை கல்வீசி தாக்குபவர்களையும் தீவிரவாதிகளாகவே நினைப்போம் என்று ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்தார்.
டெல்லியில் 72-வது ஆண்டு காலாட்படை தின விழா நடைபெற்றது.

விழாவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் கூறியதாவது:ஜம்மு-காஷ்மீரின் அனந்த் நாக் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ராஜேந்திர சிங் மீது சிலர் கல்வீசி தாக்கியுள்ளனர். இதில் அந்த ராணுவ வீரர் உயிரிழந்தார். கல்வீசி தாக்குபவர்களையும் நாங்கள் தீவிரவாதிகளாகவே நினைப்போம். கல்வீசித் தாக்குதலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கையை ராணுவம் எடுக்கும். ராணுவ வீரர்கள் மீது கல்வீசித் தாக்கும் நடவடிக்கையை பாகிஸ்தான் ஆதரித்து வருகிறது. அவர்களுக்கு தேவையான நிதியுதவியை பாகிஸ்தான் செய்து வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து பதற்றத்தை நீடிக்கச் செய்யத் தேவையான அனைத்தையும் பாகிஸ்தான் செய்து வருகிறது.

இந்தப் பகுதியில் தங்களுக்கு வெற்றி கிடைக்காது என்று பாகிஸ் தானுக்கு நன்றாகத் தெரியும். இருந்தபோதும் தீவிரவாதத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் தூண்டி வருகிறது. தீவிரவாதிகள் ஊடுரு வல் போன்ற பல செயல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. காஷ்மீரின் வளர்ச்சியைத் தடுக்க பாகிஸ்தான் விரும்புகிறது. ஆனால் எதையும் சமாளிக்கும் திறமையை ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பெற்றுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து