முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வின் இரக்கத்தினால் நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை அமித்ஷாவிற்கு பினராய் பதிலடி

ஞாயிற்றுக்கிழமை, 28 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்,பா.ஜ.க.வின் இரக்கத்தினால் ஒன்றும் நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை என்று பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷாவின் விமர்சனத்திற்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் பதிலளித்துள்ளார்.ஒரு நாள் பயணமாக கேரளாவிற்கு பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் அமித்ஷா நேற்று முன்தினம் வந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது, சபரிமலை விவகாரத்தில் போராட்டம் நடத்தி வரும் பக்தர்களுக்கு எதிராக போலீஸ் படையை மாநில கம்யூனிஸ்ட் அரசு பயன்படுத்துகிறது. இவ்வாறு பினராய் அரசு தொடர்ந்து செயல்பட்டால்,அதற்காக பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும். ஆட்சியைக் கூட இழக்க நேரிடும் என்று பேசியிருந்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கேரள முதல்வர் பினராய் தெரிவித்ததாவது, கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசானது பாரதிய ஜனதா கட்சியின் இரக்கத்தினால் ஒன்றும் ஆட்சிக்கு வரவில்லை. கேரள மக்களின் ஆதரவினால்தான் அதிகாரத்திற்கு வந்துள்ளோம். சுப்ரீம் கோர்ட் உத்தரவை நடைமுறைப்படுத்த செயல்படுகிறோம் என்பதற்காக ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட அரசையே மிரட்ட பா.ஜ.க தேசியத் தலைவர் துணிந்துள்ளார்.  அரசியலமைப்பு அளித்த அடிப்படை உரிமைகளை காக்கும் முயற்சியில் ஈடுபட்டதற்காகத்தான் எங்களது அரசு மிரட்டப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து