முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெண்டர் விவகாரம்: சி.பி.ஐ-க்கு மாற்றியதை எதிர்த்து முதல்வர் தாக்கல் செய்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

ஞாயிற்றுக்கிழமை, 28 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,தமிழக நெடுஞ்சாலை ஒப்பந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் தமிழக முதல்வர் பழனிசாமி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது  சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது.

தமிழக நெடுஞ்சாலைத் துறை டெண்டரில் ரூ. 4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தக் கோரி தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான புகாருக்கு ஆதாரம் ஏதும் இல்லை. டெண்டர் விவகாரத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் மனுதாரர் ஆர்.எஸ். பாரதி கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் முதல்வர் கையில் இருக்கும் லஞ்ச ஒழிப்பு துறை இதனை முறையாக விசாரித்து இருக்காது என்று கூறப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் புகாரை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. மேலும் 3 மாதங்களுக்குள் ஆரம்ப கட்ட விசாரணையை சி.பி.ஐ. முடிக்க வேண்டும். ஆரம்ப கட்ட விசாரணையில் முகாந்திரம் இருந்தால் முதல்வர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கலாம் என்றும் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டு இருந்தார். மேலும் ஒரு வாரத்தில் சி.பி.ஐ.யிடம் ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறை ஒப்படைக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 22-ம் தேதி அப்பீல் செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு மனுவில்,டெண்டர் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது ஏற்புடையதல்ல. இதனால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து