முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பையில் தோனி ஆடுவாரா?

ஞாயிற்றுக்கிழமை, 28 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

சென்னை : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மே 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இந்த உலகக் கோப்பை போட்டியில் தோனி இடம்பெறுவாரா என்பதே அனைவரது கேள்வியாக உள்ளது.

தோனி உலகக் கோப்பையில் விளையாடுவார் என்று தேர்வு குழு தலைவர் பிரசாத் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால் அவரது ஆட்டம் தற்போது மோசமாக இருந்து வருவதால் உலகக் கோப்பை அணியில் இடம் பெற முடியுமா? என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2 போட்டியிலும் சேர்த்து 27 ரன்னே எடுத்தார். ஆசிய கோப்பையிலும் ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 65 ரன் எடுத்தார். அதன் பிறகு அவர் அரை சதம் அடிக்கவில்லை. இங்கிலாந்துக்கு எதிராக ஜூலை மாதம் அதிகபட்சமாக 42 ரன் எடுத்தார். இந்த மோசமான பேட்டிங் காரணமாக தோனி நெருக்கடியில் உள்ளார். உலகக் கோப்பைக்கு முன்பு இந்திய அணி ஒரு நாள் போட்டியில் மட்டுமே விளையாடுகிறது. அதற்குள் தோனி தனது ஆட்டத்தினை நிரூபிக்க வேண்டும்.

2018-ம் ஆண்டோடு டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது 20 ஓவர் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இனி 20 ஓவர் அணியில் இடம் பெறுவது கேள்விக்குறியே. ஒரு நாள் போட்டி அணியில் மட்டும் இருக்கிறார். உலகக் கோப்பைக்காக அவர் அதில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தோனி போன்ற அனுபவம் வாய்ந்த வீரர் உலகக் கோப்பையில் ஆடுவது அணிக்கு அவசியமானது. இதனால் அவர் தனது பேட்டிங்களை மேம்படுத்த வேண்டும். தோனி இரண்டு உலகக் கோப்பையை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து