முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரேசில் அதிபர் தேர்தலில் பொல்சனாரூ வெற்றி

திங்கட்கிழமை, 29 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

பிரேசிலா,பிரேசில் அதிபர் தேர்தலில் தீவிர வலதுசாரி வேட்பாளரான சயீர் பொல்சனாரூ மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட சூழ்நிலையில் பொல்சனாரூ 55 சதவீத வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பெர்னாண்டோ 45 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர். பெர்னாண்டோ இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர்.

பிரேசில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக அவர் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனால்தான், பெர்னாண்டோ களம் கண்டார். பொல்சனாரூ தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், தேர்தல் பிரசாரத்தின் போது அவருக்கு தீவிரமான எதிர்ப்புகள் எழுந்ததன. கத்தியால் அவர் குத்தப்பட்ட சம்பவமும் நிகழ்ந்தது. அவருக்கு எதிராக பல லட்சம் பெண்கள் அவர் வேண்டாம் என்று பொருள் தரும் ஹேஷ்டேக் பிரசாரம் செய்தனர். இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மரியா டோ ரொசாரியோ-வை பார்த்து உன்னை வன்புணர்வு செய்ய மாட்டேன். ஏனென்றால் நீ அதற்குத் தகுதியானவர் இல்லை என்று ஒரு முறை கூறியவர் பொல்சனாரூ என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து