ரனிஜியுடன் மோதும் அஜித்

திங்கட்கிழமை, 29 அக்டோபர் 2018      சினிமா
cini boomi ajith rajini 29--10-2018

வீரம், வேதாளம், விவேகம் படத்திற்கு பிறகு இயக்குனர் சிவா இயக்கி உள்ள விஸ்வாசம். இந்த படத்தில் அஜித் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகிபாபு, தம்பிராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரித்துள்ளார். இந்த படம் முதலில் தீபாவளிக்கு என்ற அறிவிப்புடன் படம் பூஜை போடப்பட்டது.இருப்பினும் தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தம் காரணமாக படப்படிப்பு இரண்டு மாதம் தாமதமாக தொடங்கியது. இதனால் படத்தின் வெளியீடு பெங்கலுக்கு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தயாரிப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது.கடந்த 2 நாட்களுக்கு முன்பு இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கின. அஜித் தனது காட்சிகளுக்கு டப்பிங் பேசி வருகிறார்.

இதனிடையே ரஜினி நடிப்பில் சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் பேட்ட படத்தை பொங்கலுக்கு வெளியிட அந்நிறுவனம் முயற்சி மேற்கொண்டது. இதனால் அஜித் ரசிகர்களுடம் தயாரிப்பாளரும் குழப்பம் அடைந்தனர்.தொடர்ந்து பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் என வதந்திகள் பரவியது. ஆனால் 3 மாதங்களுக்கு முன்பே பொங்கலுக்கு வெளியாகும் என்ற அறிவிப்பை வெளியிட்டு விஸ்வாசம் படக்குழு வேலைகளை மேற்கொண்டு வந்தது. இதனையடுத்து விஸ்வாசம் படம் பொங்கலுக்கு ரிலீஸ் என தயாரிப்பாளர் தியாகராஜன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் படத்தினுடைய புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். அதில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி அஜித் கெத்தாக பயணிக்கிறார்.இருப்பினும் சூரியன் எப்.எம். நிறுவனம் தனது டுவிட்டரில் ‘பேட்ட’ பொங்கல் ட்ரீட் என டுவிட் செய்து இருப்பதால் ரஜினியின் பேட்ட படமும் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து