முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.ஐ. சிறப்பு இயக்குநரை கைது செய்ய தடை: டெல்லி ஐகோர்ட்

செவ்வாய்க்கிழமை, 30 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,சி.பி.ஐ. இயக்குர் அலோக் வர்மாவும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவும் ஒருவர் மீது ஒருவர் லஞ்சப் புகாரை சுமத்தியதால் இவரையும் மத்திய அரசு கடந்த வாரம் கட்டாய விடுப்பில் அனுப்பியது. இருவரும் பரஸ்பரம் தெரிவித்த லஞ்சப் புகார் குறித்து விசாரித்து 2 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

முன்னதாக ஐதராபாத் தொழிலதிபர் ஒருவரிடமிருந்து லஞ்சம் பெற்றதாக அஸ்தானா, டி.எஸ்.பி. தேவேந்திர குமார் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் தேவேந்திர குமார் கடந்த 22-ம் தேதி கைது செய்யப்பட்டார். அஸ்தானா, தேவேந்திர குமார் ஆகிய இருவரும் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு நீதிபதி நஜ்மி வாஜிரி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. பதில் மனு தாக்கல் செய்யாதது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய சி.பி.ஐ. தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி நவம்பர் 1-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய சி.பி.ஐ.-க்கு உத்தரவிட்டார். அதுவரை அஸ்தானாவுக்கு எதிரான வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்கவும் கைது செய்யக் கூடாது எனவும் சி.பி.ஐ.-க்கு உத்தரவிட்டார். இதனிடையே மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து