முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரிப்பு: பிரதமர் மோடி பெருமிதம்

செவ்வாய்க்கிழமை, 30 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,மாதந்தோறும் 250 கோடி பணப்பரிவர்த்தனை நடக்கும் அளவிற்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்து உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

டெல்லியில் நடக்கும் இந்தியா இத்தாலி இடையிலான தொழில்நுட்ப மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:-உலகம் 4-வது டிஜிட்டல் புரட்சி பற்றி பேசி வருகிறது. ஆனால், இந்தியாவும், இத்தாலியும் தங்களது திறமையின் அடிப்படையில், மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக செயல்படுகின்றன. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது அதிகரித்து வருகிறது. மாதம் தோறும் 250 கோடி பணப்பரிவர்த்தனை நடக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் 1ஜி.பி இணைய கட்டணம் 90 சதவீதம் குறைந்து உள்ளது.

தொழில்நுட்பத்தில் இத்தாலி சுயசார்பு பெற்றுள்ளது. இது நமக்கு நம்பிக்கை தருகிறது. தொழில்நுட்பத்தின் உதவியுடன் சர்வதேச சவால்களை சமாளிக்க இரு நாடுகளும் கூட்டணி அமைக்கலாம். உரிய காலம் வரும் போது இந்தியா மற்றும் இத்தாலி இடையிலான ஒத்துழைப்பு அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தொழில்நுட்பம் இல்லாத வாழ்க்கை என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாத காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம். எளிதாக வாழ்வதற்கான வசதியை தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு பிரதமர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் இந்தியா வந்துள்ள இத்தாலி பிரதமர் கியூசெபே கான்டியும் கலந்து கொண்டார். முன்னதாக அவர், பிரதமர் மோடியை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து