முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-ஜப்பான் உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளோம் - தாயகம் திரும்பிய மோடி பெருமிதம்

செவ்வாய்க்கிழமை, 30 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி :  ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி தாயகம் திரும்பினார்.

இந்தியா-ஜப்பான் இடையிலான 13-ஆவது வருடாந்திர மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்  நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேவும் பங்கேற்றனர். அப்போது, இரு தரப்பு உறவு, பல்வேறு புதிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது, இந்தோ- பசிபிக் பிராந்தியம், சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இரு நாடுகளின் வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சர்கள்  சந்தித்துப் பேச்சு நடத்துவது, மின்னணுத் துறையில் ஒத்துழைப்பு, இணைய தளப் பாதுகாப்பு, சுகாதாரம், பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, விண்வெளித் துறையில் ஒத்துழைப்பு, அதிவிரைவு ரயில் திட்டம் உள்ளிட்டவை தொடர்பான 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இது தவிர இந்தியாவுடன் 75 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.5.5 லட்சம் கோடி) பணப் பரிமாற்ற ஒப்பந்தத்தையும் ஜப்பான் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் அந்நியச் செலாவணி சந்தையிலும், முதலீட்டுச் சந்தையிலும் ஸ்திரத்தன்மை ஏற்படும். ஏனெனில், இந்தியாவுக்குத் தேவை ஏற்படும்போது 75 பில்லியன் டாலர்களை தர இந்த ஒப்பந்தம் மூலம் ஜப்பான் உறுதிசெய்துள்ளது. ஜப்பானின் ஒத்துழைப்புடன் மும்பை- ஆமதாபாத் இடையே புல்லட் ரயில் இயக்கும் திட்டத்தையும் இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து ஜப்பானில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ஜப்பான் பயணத்தை நிறைவு செய்துவிட்டு திங்கள்கிழமை இரவே ஜப்பானில் இருந்து தாயகம் புறப்பட்ட மோடி நள்ளிரவு இந்தியா வந்து சேர்ந்தார்.டெல்லி விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை அதிகாரிகள் வரவேற்றனர்.

ஜப்பான் பிரதமர் அபேவுடனான சந்திப்பு மிகவும், ஆக்கபூர்வமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் அமைந்தது. இந்தியா-ஜப்பான் உறவை அடுத்த கட்டத்துக்கு  எடுத்துச் சென்றுள்ளோம் என்று மோடி தனது டுவிட்டர் பக்க பதிவில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து