முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரின் அசாதாரண சூழலுக்கு மோடியின் தவறுகளே காரணம்:ராகுல் காந்தி தாக்கு

செவ்வாய்க்கிழமை, 30 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அசாதாரண சூழலுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் தவறுகளே காரணம் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் நவம்பர் 28-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்த மாநிலத்துக்கு ராகுல் இரு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
உஜ்ஜைன் மாவட்டத்தில்   நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவும் வகையில் மோடி அரசு நடந்து வருகிறது. அதனால் இந்த ஆண்டில் ராணுவ வீரர்களும் , மக்களும் பயங்கரவாதிகளால் அதிகமாக மடிந்துள்ளனர். ஆனால் இதுவரை ஒரு அரசியல்வாதியும் அங்கு உயிரிழக்கவில்லை. மோடியின் தவறுகளால்தான் பல வீரர்கள் உயிரிழக்கின்றனர். துல்லியத் தாக்குதல் குறித்து எப்போதும் மோடி பேசி வருகிறார். ஆனால் ராணுவ வீரர்களின் உயிரிழப்பு குறித்து அவர் ஏன் பேசவில்லை? என்று ராகுல் கேள்வி எழுப்பினார்.

ஒரே பதவி ஒரே ஊதியம் திட்டம் குறித்து பேசுகையில் , இந்த திட்டம் இன்னும் மத்திய அரசால் செயல்படுத்தபட வில்லை. ஆனால் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தி விட்டதாக மோடி பொய் கூறி வருகிறார். சில நாள்களுக்கு முன்பு கூட, ராணுவ வீரர் ஒருவர் என்னைச் சந்தித்து இந்த திட்டத்தில் மோடியை நம்பி ஏமாந்து விட்டதாக கவலையுடன் கூறினார். ஒரே பதவி ஒரே ஊதியம் திட்டம் செயல்படுத்தப்பட்டதாக மோடிதான் கூறுகிறாரே தவிர முன்னாள் ராணுவ வீரர்கள் இல்லை என்று ராகுல் கூறினார்.

நிதி மோசடியாளர்கள் குறித்து பேசுகையில், வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு நாட்டை விட்டு தப்பி ஓடிய விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி ஆகிய நிதி மோசடியாளர்களுக்கு மத்திய அரசு ஆதரவு அளித்து வருகிறது. அவர்கள் நம் நாட்டு பணத்தை எடுத்துக் கொண்டு வெளிநாடுகளில் உல்லாசமாக வாழ்கின்றனர். மல்லையா வெளிநாடு செல்வதற்கு முன்பு மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்ததாக கூறுகின்றனர். அவர் ஏன் அதுகுறித்து விசாரணை அமைப்புகளிடம் தகவல் தெரிவிக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து