முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஷ்கரில் நடந்த தாக்குதல் சம்பவம்: கணவர் பலியான செய்தியை டி.வி.யில் பார்த்து கதறி அழுத மனைவி

புதன்கிழமை, 31 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பலியானது தனது கணவர் எனத் தெரியாமலேயே அவர் மீது நடந்த தாக்குதல் செய்தியை தொலைக்காட்சியில் மனைவி பார்த்திருக்கிறார்.  சத்தீஸ்கரின் நக்சல்வாதிகள் நிகழ்த்திய பயங்கரத் தாக்குதலில் தூர்தர்ஷன் கேமராமேன் பலியானதில் இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடே மாவட்டத்தில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி செய்திக்குழுவினர் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பாதுகாப்பிற்கு மத்திய பாதுகாப்பு படையான சி.ஆர்.பி.எப். காவலர்களும் இருந்த நிலையில் அவர்கள் மீது நக்சல் தாக்குதல் நடைபெற்றது. இதில் அப்பகுதி காவல் ஆய்வாளர் ருத்ர பிரதாப், காவலர் மங்களு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், தூர்தர்ஷன் தொலைக்காட்சி கேமராமேன் அச்சுதானந்த் சாஹு பரிதாபமாக பலியானார்.

இவரது குடும்பத்தினர் மேற்கு டெல்லியின் துவாரகாவில் உள்ள பகவது தோட்டத்தில் வசித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் நடந்த சில நிமிடங்களில் இது தொடர்பான செய்தி இந்தி மற்றும் ஆங்கில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இதில் பலியானது தன் கணவர் எனத் தெரியாமல் அச்சுதானந்தின் மனைவியான ஹிமான்சலி அந்தச் செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு, அதில் அச்சுதானந்த் பலியான செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்த ஹிமான்சலி கதறி அழுதார்.

ஒடிசா மாநில பொளங்கீர் மாவட்டத்தின் குசுரிமுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் அச்சுதானந்த் சாஹு. பட்டப்படிப்பிற்கு பின் இந்திய ராணுவத்தில் எழுத்தராகப் பணிக்குச் சேர்ந்த இவர் ஒடிசாவின் பிஜு பட்நாயக் டி.வி. இன்ஸ்டியூட்டில் டிப்ளமா பயின்றவர். டெல்லியில் தனது பத்திரிகையாளர் பணியைத் தொடங்கினார். கடந்த 2011-ல் அச்சுதானந்துக்கு டெல்லி தூர்தர்ஷனில் கேமராமேனாக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து