முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலசலிங்கம் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் பதவி ஏற்பு

புதன்கிழமை, 31 அக்டோபர் 2018      விருதுநகர்
Image Unavailable

   விருதுநகர் -ஸ்ரீவில்லிபுத்தூர்   கலசலிங்கம்  பல்கலைக்கழக   துணைவேந்தராக    முனைவர்   நாகராஜ் ராம்ராவ்  பதவி ஏற்றார்.  கல்வி ஆராய்ச்சிக்கு   அதிக முக்கியத்துவம்  கொடுக்கப்படும்  என்று  அவர் தெரிவித்தார்.
விருதுநகர்  மாவட்டம்  ஸ்ரீவில்லிபுத்தூரை  அடுத்த  கிருஷ்ணன்கோவிலில்   கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின்  புதிய  துணைவேந்தராக முனைவர்  நாகராஜ் ராம்ராவ் நியமிக்கப்பட்டார்.  அவருக்கு   அதற்கான  உத்தரவை  பல்கலைக்கழக   வேந்தர்  முனைவர் க. ஸ்ரீதரன்   வழங்கினார்.
அதன்பின்  துணைவேந்தராக    முனைவர்   நாகராஜ் ராம்ராவ்  பதவி ஏற்றார்.  இவர் இதற்கு  முன்   பெங்களுர்  ஆக்ஸ்போர்டு  கல்வி நிறுவனங்களில்  பல ஆண்டுகளாக வெவ்வேறு தலைமைப் பொறுப்புகளிலும்,  அதற்கு  முன்பு,  குஜராத்  மாநிலம்  காந்திநகர் திருபாய்,  அம்பாணி  தகவல்  தொழிற்நுட்ப  நிறுவனத்தில்  துணைவேந்தராக  பணியாற்றினார்  என்பது குறிப்பிடத்தக்கது.
பதவி ஏற்ற துணைவேந்தர்   முனைவர்   நாகராஜ் ராம்ராவ் நிருபர்களிடம்   கூறியதாவது:-
“கலசலிங்கம்  பல்கலைக்கழகமானது  கிராமப்புற  மக்கள்   வளர்ச்சியில்   முக்கிய  பங்காற்றி  வருகிறது.   இந்த  பல்கலைக்கழகம்  ‘ஏ’   கிரேடு   அந்தஸ்து  பெற்றுள்ளது.  மேலும்  அந்தஸ்தை  உயர்த்த   அனைவரின்   ஒத்துழைப்போடு  நடவடிக்கை   எடுக்கப்படும்.  மாணவர்களின்  நலனை  கருத்தில் கொண்டு புதிய முறை  கல்வி ஆராய்ச்சிக்கு   அதிக  முக்கியத்துவம்  கொடுக்கப்படும்.  ஒவ்வொரு பாடத்திட்டங்களிலும்  தொழிற்சாலை வல்லுநர்களின்  ஆலோசனையில்  பாடத்திட்டங்களை  வகுத்து  தொழிற்சாலைக்கு  ஏற்ற  திறமையான  பொறியாளர்களை  உருவாக்க  துரிதமாக  செயல்படுத்தப்படும்
அனைத்து  துறைகளும்  ‘அபெட்’   தர சான்றிதழ்  பெறவும்,  இந்தியாவில் கலசலிங்கம் பல்கலை  முதல் இடத்தைப்பெறவும்,   புதிய  நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படும். “
இவ்வாறு  அவர் கூறினார்.
பதவி  ஏற்பு  விழாவில் வேந்தர் முனைவர் க. ஸ்ரீதரன்,  இணைவேந்தர்   டாக்டர்  அறிவழகி ஸ்ரீதரன், பல்கலை  துணைத்தலைவர்  முனைவர் எஸ். சசிஆனந்த், பதிவாளர்  முனைவர்   வெ. வாசுதேவன்,  முனைவர் எஸ்.  சரவணசங்கர், மற்றும் டீன்கள்   அனைத்து  துறை தலைவர்கள்  கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து