முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயோத்தி பிரச்னைக்கு விரைந்து தீர்வு: உ.பி முதல்வர் யோகி வலியுறுத்தல்

புதன்கிழமை, 31 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

லக்னோ : நீண்ட காலமாக நிலுவையிலுள்ள ராம ஜென்ம பூமி- பாபர் மசூதி விவகாரத்தில் விரைந்து தீர்வு காணப்பட வேண்டும். அப்போது தான் அமைதியையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க முடியும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்  தெரிவித்தார்.

ஜனவரி மாதத்திற்கு முன் இவ்வழக்கு குறித்து விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம்  கருத்து தெரிவித்திருந்த நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:

அயோத்தி வழக்கை விரைந்து விசாரணை நடத்துவதன் மூலமே உடனடியாக தீர்வு காண முடியும். இதன்மூலம் நாட்டில் சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் ஏற்படுத்த முடியும்.

ஆனால், இதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்று எனக்கு தெரியவில்லை. இருப்பினும், இவ்வழக்கின் அனைத்து நிகழ்வுகளையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். சுப்ரீம் கோர்ட் பெரும்பான்மையான மக்களின் அமைதி, சகோதரத்துவம் மற்றும் கெளரவம், நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் தீர்ப்பளிக்கும் என்று நம்புகிறேன். இதற்கான அனைத்து மாற்று ஏற்பாடுகளையும் நீதிமன்றம் ஆராயும் என்று எதிர்பார்க்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து