முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேஷிய விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு

வியாழக்கிழமை, 1 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

ஜகார்தா : இந்தோனேஷியாவில் 189 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானத்தின் உடல் பகுதியைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், ஏர்லயன் விமானத்தின் ஒரு கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு கமிட்டி தெரிவித்துள்ளது.

இந்தோனேஷியாவைச் சேர்ந்த லயன் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் விமானமொன்று தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து பங்க்கா பெலிதுங் மாகாணத் தலைநகர் பங்கால் பினாங் நகருக்கு கடந்த திங்கட்கிழமை சென்ற போது அடுத்த 10 நிமிடங்களில் அந்த விமானம் கடலுக்குள் விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தில் பயணம் செய்த 189 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விமானம் விழுந்து நொறுங்கிய கடல் பகுதியில் நூற்றுக்கணக்கான மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடுதல் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேடுதல் பணியில் மீட்கப்பட்ட மனித உடல் பாகங்களை கொண்ட 10 சவப் பைகளை மீட்புக் குழுவினர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கடலுக்குள் மூழ்கிய விமானத்தின் முக்கிய பகுதியைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 115 அடி ஆழத்தில் விமானத்தின் முக்கிய பாகங்கள் கிடக்கக் கூடும் என மீட்புக் குழுவினர் தெரிவித்த நிலையில், விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஏர் லயன் விமானத்தின் ஒரு கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேஷியாவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு கமிட்டி தெரிவித்துள்ளது. ஆனால் அதில் காக்பிட் வாய்ஸ் ரெகார்டர் குறித்து நாங்கள் இன்னும் ஏதும் அறியவில்லை. ஆய்விற்குப் பின் தெரியவரும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து