முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.இ.தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி ; தொடரையும் வென்றது

வியாழக்கிழமை, 1 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

திருவனந்தபுரம் : வெஸ்ட் இண்டீசுடனான கடைசி ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 3-1 என்ற கணக்கில் தொடரையையும் இந்திய அணி வென்றது.

டாஸ் வெற்றி...

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சரியான ஒரு மணிக்கு சுண்டப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் மாற்றம் ஏதுமில்லை. மும்பையில் விளையாடிய அதே அணி களம் இறங்குகிறது. இந்தியா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ரோகித் சர்மா, 2. ஷிகர் தவான், 3. விராட் கோலி, 4. அம்பதி ராயுடு, 5. எம்எஸ் டோனி, 6. கேதர் ஜாதவ், 7. ரவிந்திர ஜடேஜா, 8. புவனேஸ்வர் குமார், 9. குல்தீப் யாதவ், 10. கலீல் அஹமது, 11. பும்ரா.

மே.இ.தீவு திணறல்

முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். ஆட்டத்தின் 4-வது பந்தில் கிரன் பொவேல் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அடுத்து வந்த ஷாய் ஹோப்பை ரன்ஏதும் எடுக்க விடாமல் பும்ரா க்ளீன் போல்டாக்கினார். இதனால் இரண்டு ரன்கள் எடுப்பதற்குள் வெஸ்ட் இண்டீஸ் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு ரோவ்மன் பொவேல் உடன் சாமுவேல்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியால் ஓரளவிற்குத்தான் தாக்குப்பிடிக்க முடிந்தது. ஸ்கோர் 36 ரன்னாக இருக்கும்போது சாமுவேல்ஸ் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அதிரடி பேட்ஸ்மேன் ஹெட்மையரை 9 ரன்னில் ஜடேஜா வீழ்த்தினார். ஜடேஜா சுழலில் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் திணறினார்கள்.

ஜடேஜா அபாரம்

ஹோல்டர் மட்டும் தாக்குப்பிடித்து 25 ரன்கள் சேர்க்க, வெஸ்ட் இண்டீஸ் 31.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 104 ரன்னில் சுருண்டது. ஜடேஜா அபாரமான பந்து வீசி 9.5 ஓவரில் 34 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் சாய்த்தார். பும்ரா, கலீல் அஹமது தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

தொடரை வென்றது

பின்னர் 105 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக தவான், ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினார்கள். வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை முதலில் சந்திக்க இருவரும் திணறினார்கள். தவான் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தில் வெளிப்படுத்தியது. ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவர் அரைசதம் அடிக்க இந்தயா 14.5 ஓவரிலேயே 105 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 3-1 எனக்கைப்பற்றியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து