முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் டி 20 போட்டி: நியூசிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்

வியாழக்கிழமை, 1 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

அபுதாபி : அபுதாபியில் நடைபெற்ற முதலாவது டி-20 போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை 2 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

148 ரன்கள்

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர் அபுதாபியில் நடைபெறுகிறது. முதலாவது டி-20 போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் மொகமது ஹபீஸ் 45 ரன்னும், சர்ப்ராஸ் அகமது 34 ரன்னும் அடித்து அவுட்டாகினர். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இறுதியில், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது.

மன்ரோ அரை சதம்

இதைத்தொடர்ந்து, 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. காலின் மன்ரோ பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு ராஸ் டெய்லர் ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 42 ரன்னில் அவுட்டாகாமல் இருந்தார். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. ஒருபுறம் ராஸ் டெய்லர் நின்றாலும், அந்த ஓவரில் 2 பவுண்டரி உள்பட 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 

இதையடுத்து, 2 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான். இந்த வெற்றியை தொடர்ந்து, பாகிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து