முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தான் உருவாக்கிய விமானத்தை ஓட்டலாக மாற்றும் சீன விவசாயி

வெள்ளிக்கிழமை, 2 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்,விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற ஆசையில் சீன விவசாயி ஒருவர் சொந்தமாக விமானம் ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளார்.வடகிழக்கு சீனாவைச் சேர்ந்த பூண்டு விவசாயி ஜூ யூ. சிறு வயதிலிருந்தே விமானத்தில் பயணிக்க வேண்டும், அதுவும் சொந்த விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பது தான் ஜூவின் ஆசை. ஆனால் அவரது குடும்ப சூழல் அதற்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் தானே ஒரு விமானத்தை உருவாக்குவது என அவர் முடிவு செய்தார். இதற்காக இணையத்தின் உதவியுடன் விமானப் படங்களைச் சேகரித்து ஆய்வு செய்தார்.

அதன் முடிவில் தன் நிலத்தில் சொந்தமாக ஒரு விமானத்தை உருவாக்கும் நம்பிக்கை அவருக்கு கிடைத்துள்ளது. உடனடியாக களத்தில் இறங்கிய ஜூ, தன் சேமிப்புப் பணமான 3,74,000 அமெரிக்க டாலர்களை கொண்டு, சுமார் 60 டன் இரும்புகளுடன் ஏர்பஸ் ஏ 320-யை அச்சு அசலாகப் பிரதிபலித்தது போல் ஒரு விமானத்தைஉருவாக்கியுள்ளார்.விவசாயத்திற்கு இடையே கையூன் என்ற நகரத்தில் ஒரு தொழிற்சாலையில் வெல்டிங் வேலையும் செய்து வந்துள்ளார் ஜூ. எனவே, இந்த விமானத்தை உருவாக்கும் பணி அவருக்கு எளிதாக இருந்துள்ளது. அதோடு, இந்த விமானத்தை உருவாக்க, ஜூவிற்கு அவரது ஐந்து நண்பர்கள் உதவி புரிந்துள்ளனர். விமானம் அரைகுறையாக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளதால், அது வானில் பறக்கும் அளவிற்கு தரம் வாய்ந்ததாக இல்லை. எனவே, தற்போதைக்கு அந்த விமானத்தை உணவகமாக மாற்ற திட்டமிட்டுள்ளார் ஜூ.தனது விமான ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளார் ஜு. தனது வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களை ஒரு எஜமானர்கள் என நினைத்துக் கொள்ளும் அளவிற்கு தனது உபச்சாரம் இருக்கும் என்கிறார் அவர். ஜூ உருவாக்கிய விமானத்தின் இந்திய மதிப்பு சுமார் 2 கோடியே 77 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து