முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உப்பூர் அனல்மின்நிலைய நிர்மான பணிகள் கலெக்டர் வீரராகராவ் நேரில் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 2 நவம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் அமைக்கப்பட்டுவரும் அனல்மின் நிலைய நிர்மான பணிகளை கலெக்டர் வீரராகவராவ் செய்தியாளர்களுடன் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார்.
 ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம்  வட்டம், உப்பூர், வலமாவூர் மற்றும் திருப்பாலைக்குடி ஆகிய கிராமப்பகுதிகளை உள்ளடக்கி ஆயிரத்து 600 மெகாவாட் சூப்பர் கிரிட்டிக்கல் அனல் மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு,  ரூ.12,665 கோடி மதிப்பீட்டில் 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பணிகள் துவங்கப்பட்டது.  நிர்மானப் பணிகளை மேற்கொள்வதற்காக பெல் மற்றும் எல்.அன்.டி மற்றும் ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  அனல்மின் நிலையத்திற்கான கொதிகலன் டர்பைன் மற்றும் ஜெனரேட்டர் நிர்மானப்பணிகளை பெல் நிறுவனமும்,  மீதமுள்ள அனைத்து நிர்மானப் பணிகளும் எல்.அன்.டி. மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.   அதன்படி மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் இப்பணிகளின் நிலை குறித்து நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது அப்பகுதிகளைச் சார்ந்த கிராம பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
  இந்த செய்தியாளர் சுற்றுப்பயணத்தின் போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் - உப்பூர் திட்டம் தலைமைப் பொறியாhள் மாரிமுத்து, மேற்பார்வை பொறியாளர் ஏ.சிவக்குமார், உதவி வன பாதுகாவலர் ராஜ்குமார்,  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர்கள் வி.சின்னையா, வி.அல்லி, ஆர்.ஜெயசங்கரி, தமிழ்ச்செல்வன், வெங்கடேஸ்வரன், அதியமான், பெல்நிறுவன பொது மேலாளர் அன்பரசு, எல்.அன்ட்.டி நிர்வாக அலுவலர் ராம்வி, ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் கார்த்திகேயன் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து