முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடைத்தேர்தல் வியூகம் குறித்து 20 தொகுதிகள் தேர்தல் பொறுப்பாளர்களுடன் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இன்று ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 2 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,20 தொகுதிகளின் அ.தி.மு.க தேர்தல் பொறுப்பாளர்களுடன் இடைத்தேர்தல் வீயூகம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்துகின்றனர்.

இடைத்தேர்தல்...தமிழ்நாட்டில் தினகரன் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து 18 தொகுதிகள் மற்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவு காரணமாக திருவாரூரிலும், அ.தி.மு.க. உறுப்பினர் ஏ.கே.போஸ் மரணம் காரணமாக திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகள் உள்ளிட்ட 20 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்  துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அண்மையில் தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்தனர்.

நிர்வாகிகள் பங்கேற்பு....இந்த தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று காலை அ.தி.மு.க. தலைமைக்கழக அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்கான வியூகங்களை வகுக்கின்றனர். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர்கள், வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோரும், அமைச்சர்கள், அமைப்பு செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து