முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருதுநகர் மாவட்ட முதல் போக பாசனத்திற்காக சாஸ்தா கோவில் அணையிலிருந்து அமைச்சர் .கே.டி.ராஜேந்திரபாலாஜி தண்ணீரை திறந்து வைத்தார்

வெள்ளிக்கிழமை, 2 நவம்பர் 2018      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர் -விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டத்தில் உள்ள சாஸ்தா கோவில் அணையில் மாவட்ட ஆட்சித்தலைவர்  .அ.சிவஞானம், தலைமையில், விருதுநகர் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்  .டி.ராதாகிருஷ்ணன்   முன்னிலையில்,  பால்வளத்துறை அமைச்சர்  .கே.டி.ராஜேந்திரபாலாஜி  விருதுநகர் மாவட்ட முதல் போக பாசனத்திற்காக சாஸ்தா கோவில் அணையிலிருந்து  தண்ணீரை திறந்து வைத்தார்கள்.
பின்னர்,   பால்வளத்துறை அமைச்சர்   தெரிவித்ததாவது:-
மா புரட்சித்தலைவி அம்மா   நல்லாசியுடன் செயல்பட்டு வரும்   தமிழ்நாடு முதலமைச்சர்   தலைமையிலான அரசு விருதுநகர் மாவட்டத்திலுள்ள வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கைளை ஏற்று பிளவக்கல் (பெரியார்) அணையிலிருந்து  முதல் போக பாசனத்திற்கு தண்ணீரை திறந்துவிட உத்தரவிட்டுள்ளது.
சாஸ்தா கோவில் அணை 0.308 சதுர மைல் நீர்ப்பிடிப்பு பகுதியை கொண்டவை. இந்த அணை 36.47 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டது. தற்போது அணையின் நீர்மட்ட முழு கொள்ளளவு எட்டியுள்ளது. மேலும், அணைக்கு வினாடிக்கு 30 கனஅடி வீதம் நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. எனவே இந்நீர்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 50 கனஅடி வீதம் 02.11.2018  முதல்  8 நாட்களுக்கு  தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது என   பால்வளத்துறை அமைச்சர்  தெரிவித்தார்கள்.
 மேலும், இராஜபாளையம் வட்டத்திலுள்ள வடக்கு தேவதானம், தெற்கு தேவதானம் , கோவிலூர், முத்துசாமியாபுரம், நல்லமங்கலம், மற்றும் செட்டியார்பட்டி ஆகிய கிராமங்களை சுற்றியுள்ள 11 கண்மாய்கள் மூலமாக 451.58 ஏக்கர் நிலங்கள் நேரடி பாசனமாகவும், 2679.10 ஏக்கர் நிலங்கள் கண்மாய்கள் பாசனமாகவும் ஆக மொத்தம் 3130.68  ஏக்கர் நஞ்சை நிலங்கள் பாசன வசதி பெறும். இதேபோல், அணையின் நீர் இருப்பினை கருத்தில் கொண்டு பிசான(காரீப்) பருவகாலம் வரை தேவைக்கேற்ப  தண்ணீர் வழங்கப்படும். எனவே, விவசாயப் பெருங்குடி மக்கள் அதிக மகசூலைப் பெறும் நோக்கத்துடன் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என  பால்வளத்துறை அமைச்சர்  கே.டி.ராஜேந்திரபாலாஜி   தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், வில்லிப்புத்தூர் சட்டமன்ற உறுப்பினர்  .மு.சந்திரபிரபா , மாவட்ட வருவாய் அலுவலர்  .கோ.உதயகுமார், பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) மேல் வைப்பாறு வடிநிலகோட்ட செயற்பொறியாளர்  மலர்விழி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து