முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையில் பணியாற்றி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி முதல்வர் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 2 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையில் பணியாற்றி உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:- சென்னை புறநகர், பூந்தமல்லியில் தீயணைப்பாளராகப் பணியாற்றி வந்த சதீஷ் என்பவர் உடல் நலக் குறைவால் காலமானார். கடலூர் மாவட்டம், முதுநிலை தீயணைப்பாளராகப் பணிபுரிந்து வந்த நடராஜன் என்பவர் உடல்நலக் குறைவால் காலமானார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் யந்திர கம்பியர் ஓட்டியாகப் பணிபுரிந்து வந்த திருமலைராஜ் உடல் நலக்குறைவால் காலமானார். திண்டுக்கல் மாவட்டம், தீத்தடுப்புக் குழு, நிலைய அலுவலர் சுந்தரமூர்த்தி உடல் நலக்குறைவால் காலமானார். கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூரில் தீ அணைப்பாளர் ஓட்டியாக பணிபுரிந்து வந்த செல்வராஜ் உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

தலா ரூ.3 லட்சம் நிதி...தீயணைப்பு - மீட்புப்பணிகள் துறையில் பணிபுரிந்து உயிரிழந்த தீயணைப்பாளர் மற்றும் யந்திர கம்பியர் ஓட்டி ஆகியோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த மேற்கண்ட ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து