முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கழகத்தின் 50வது தொடக்க விழா கொண்டாடும் போதும் நமது அரசே தமிழகத்தில் இருக்கும் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ப.ரவீந்திரநாத்குமார் பேச்சு

வெள்ளிக்கிழமை, 2 நவம்பர் 2018      தேனி
Image Unavailable

தேனி - தேனி மாவட்டம் தேனி ஒன்றிய கழகம் சார்பில் கழகத்தின் 47வது தொடக்க விழா பொதுக்கூட்டம் கொடுவிலார்பட்டியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர்.டி.கணேசன் தலைமை தாங்கினார். தயாளன், வீரமணிகர்ணன், முத்துபாலாஜி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கொடுவிலார்பட்டி ஊராட்சி செயலாளர் ராமர் வரவேற்றார். மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ப.ரவீந்திரநாத்குமார், தலைமை கழக பேச்சாளர்கள் திண்டுக்கல் குணசேகரன், குமரி பிரபாகரன் அகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ப.ரவீந்திரநாத்குமார் பேசும்போது கழகத்தின் 47வது தொடக்க விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
 ஆலமரமாக, விருட்சமாக வளர்ந்துள்ள நமது கழகத்தில் வந்து இணைந்திருக்கின்ற,  தாய்கழகத்திற்கு திரும்பி வந்த அனைவருக்கும் உரிய மரியாதையை என்றென்றும் நமது கழகம் வழங்கி வருகின்றது. திராவிட முன்னேற்ற கழகத்தை ஆட்சி கட்டிலில் ஏற்றி கருணாநிதியை முதல்வராக்குவதற்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் உழைப்பும், புரட்சித்தலைவருக்காக தமிழக மக்கள் கொடுத்த ஆதரவும் தான். இந்நிலையில் திமுகவை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணாவின் கோட்பாடான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கொள்கையிலிருந்து வழிதவறி நடந்த கருணாநிதியிடம் தவறை சுட்டிக்காட்டிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை பொய்பழி சுமத்தி கட்சியிலிலிருந்து கருணாநிதி நீக்கினார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை ராமாவரம் தோட்டத்தில் அவருடைய ரத்தத்தின் ரத்தமான தொண்டர்கள் சந்தித்து தொண்டர்களுக்காக ஒரு இயக்கத்தை துவக்குங்கள் என்று கூறினர். அதனை தொடர்ந்து 1972ல் தொண்டர்கள் இயக்கமாக கழகத்தை தோற்றுவித்து; மானசீக குருவான அண்ணாவின் பெயரையும் உருவத்தையும் சேர்த்து அதிமுகவை துவக்கினார். 1973ல் திண்டுக்கல் இடைத்தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து 1977ல் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றி தொடர்ந்து தனது இறுதிகாலம் வரை தமிழகத்தில் புரட்சித்தலைவர் ஆட்சி செய்தார். புரட்சித்தலைவர் அவர்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களை கழக கொள்கை பரப்பு செயலாளராக நியமித்தவுடன் கழகத்திற்காக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடுமையாக உழைத்தார். புரட்சித்தலைவர் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோது நடைபெற்ற தேர்தலில் கடுமையாக உழைத்து கழகத்தை அமோக வெற்றி பெறச் செய்தார். புரட்சித்தலைவர் அவர்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களிடம் நமது கழகம் தொண்டர்கள் இயக்கமாக இருக்க வேண்டும் என்று சத்தியம் வாங்கினார்.
 அவருடைய கொள்கைப்படி கடுமையாக உழைத்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 17 லட்சம் தொண்டர்களாக இருந்த கழகத்தை ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கமாக மாற்றினார். புரட்சித்தலைவர் 3 முறை, புரட்சித்தலைவி 4 முறை என 7 முறை தமிழகத்தை ஆண்ட கட்சி என்ற பெருமையை நமது கழகம் பெற்றிருக்கிறது. மேலும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தற்போது பாராளுமன்றத்தில் 3வது பெரிய கட்சியாக உருவாக்கி இருக்கிறார். மேலும் நமது பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபனை இந்தியாவில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 3வது வேட்பாளர் என்ற பெருமையை பெற செய்தார். அம்மாவுடன் இருந்த சசிகலா குடும்பத்தினர் 16 பேர் துரோகம் செய்தனர் என்று கட்சியிலிருந்தும், வீட்டிலிருந்தும் விரட்டினார். துரோகம் செய்தது தெரியாது என்றும், என்னை மட்டும் தங்களுக்கு சேவை செய்ய சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கெஞ்சிய சசிகலாவை மட்டும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சேர்த்துக் கொண்டார். தினகரனின் தில்லாலங்கடி வேலையால் ஆர்.கே. நகரில் குக்கர் சின்னம் வெற்றி பெற்றது. ஆனால் வரும் இடைத்தேர்தலில் ஆண்டிபட்டி, பெரியகுளம் உள்ளிட்ட 20 தொகுதிகளிலும் டெபாசிட் கூட வாங்க முடியாது என தங்கதமிழ்செல்வன், கதிர்காமு ஆகியோருக்கும் தெரியும். கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கழகத்தையும் ஆட்சியையும் சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர்.  கழகத்தின் 50வது பொன்விழா, கழகத்தின் நூற்றாண்டு விழாவின் போதும் நமது கழக ஆட்சியே தமிழகத்தில் இருக்கும். வரும் இடைத்தேர்தலிலும், பொதுதேர்தலிலும் கழகம் அமோக வெற்றி பெறும். அதற்கு நாம் அனைவரும் ஒருமித்து செயல்படுவோம் என்று சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் மயிலைபரமசிவம், மாவட்ட பொருளாளர் செல்லமுத்து, மாவட்ட கழக துணை செயலாளர் முருக்கோடை ராமர், பொதுக்குழு உறுப்பினர் டி.டி.சிவக்குமார்,  ஒன்றிய கழக செயலாளர்கள் பெரியகுளம் அன்னபிரகாஷ், ஆண்டிபட்டி லோகிராஜன், கடமலைமயிலை கொத்தாளமுத்து, சின்னமனூர் விமலேஸ்வரன், நகர் கழக செயலாளர்கள் பெரியகுளம் என்.வி.ராதா, தேனி கிருஷ்ணகுமார், கம்பம் ஆர்.ஆர்.ஜெகதீஸ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன், மாவட்ட மருத்துவரணி செயலாளர் டாக்டர் ஆனந்தகுமார், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பாண்டியராஜ், மாவட்ட பாசறை செயலாளர் நாராயணன்,  மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநரணி செயலாளர் நாகலாபுரம் முருகேசன், மாவட்ட கழக துணை செயலாளர் வசந்தாநாகராஜ், தேனி வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் ஜெயலட்சுமிகணேசன், தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் பாலசந்தர், பேரூர் கழக செயலாளர்கள் பழனிசெட்டிபட்டி தீபன்சக்கரவர்த்தி, வீரபாண்டி ரத்தினசபாபதி, முன்னாள் உத்தமபாளையம் ஒன்றிய கழக செயலாளர் அப்துல்காதர்ஜெய்லானி, தமிழன் பட்டாசுகடை தமிழன்,  மற்றும் நிர்வாகிகள், தொணடர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஒன்றிய கழக நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து