பந்தயத்துக்காக பிளாஸ்டிக் ஸ்பூனை விழுங்கிய சீன இளைஞர்

சனிக்கிழமை, 3 நவம்பர் 2018      உலகம்
Chinese youth 03-11-2018

பெய்ஜிங்,ஸாங் என்கிற ஒரு இளைஞரை பற்றிதான் இப்போ சீனா முழுக்க பேச்சு. அதிலும் பெட் கட்டி விளையாடுவது என்றால் இவருக்கு ரொம்ப பிடிக்குமாம். எப்பவுமே தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டே இருப்பாராம்.இப்படித்தான் ஒரு வருடத்திற்கு முன் இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு விளையாட்டு விளையாடியுள்ளார். அந்த விளையாட்டு என்னவென்றால், ஒரு ஸ்பூனை அப்படியே விழுங்க வேண்டும் என்பதுதான்! இதற்காக 20 செ.மீ. நீளமுள்ள பிளாஸ்டிக் ஸ்பூனை விழுங்குவதாக பெட் கட்டப்பட்டது.

அதன்படியே இந்த இளைஞரும் அந்த ஸ்பூனை விழுங்கி விட்டார். இதை பார்த்த நண்பர்கள் எல்லோருக்கும் அதிர்ச்சியாகி விட்டது. அதை விட ஷாக் என்னவென்றால், அந்த ஸ்பூனை விழுங்கியதால் உடம்பில் எந்த பிரச்சனையும் இளைஞருக்கு வரவே இல்லை என்பதுதான். அதுமட்டும் இல்லாமல் விழுங்கிய ஸ்பூனை பற்றிய யாருமே கவலைப்படவும் இல்லை.இப்போ பிரச்சனை என்னவென்றால் தொண்டை வலி கொஞ்சம் கொஞ்சமாக இளைஞருக்கு தெரிய ஆரம்பித்தது. பிறகு திடீரென மூச்சுக்குழலும் அடைத்துக் கொண்டது. இதனால் மூச்சுவிடவே ரொம்ப கஷ்டப்பட்டார். அதனால் சின்ஜியாங்கோல்மைன் என்ற மருத்துவமனைக்கு இளைஞர் கிளம்பி சென்றார்.

தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்று டாக்டர்களிடம் சொல்ல, டாக்டர்களோ எக்ஸ்ரே எடுத்து பார்த்த போதுதான் தெரிந்தது மூச்சுக்குழலில் 20 செ.மீ. ஸ்பூன் இருந்தது.ஸ்பூனை தொண்டையில் பார்த்ததும் விக்கித்துப் போன  டாக்டர்கள், ஆபரேஷன் செய்து அந்த ஸ்பூனை வெளியே எடுத்தார்கள். ஆனால் ஆபரேஷன்தான் கொஞ்சம் கஷ்டமாக போய் விட்டதாம். இப்படி விபரீதமாகும்படி விளையாட்டு விளையாடியதால் வினை என்ன தெரியுமா? இளைஞருக்கு பேச முடியவில்லையாம். கொஞ்ச நாள் அப்படித்தான் இருக்குமாம்... மெதுவாகதான் சரியாகி பேச முடியும் என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்களாம்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து