தலிபான் தந்தை என்றழைக்கப்படும் மவுலானா ஷமி பாக்.கில் சுட்டுக்கொலை

சனிக்கிழமை, 3 நவம்பர் 2018      உலகம்
Maulana Shami 03-11-2018

இஸ்லாமாபாத்,தலிபான் தந்தை என அழைக்கப்படும் மவுலானா ஷமி உல்-ஹாக் பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் தனது வீட்டில் இருந்த போது மர்ம நபர்களால் சுட்டு்க்கொல்லப்பட்டதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.82 வயதான மதகுருவான மவுலானா ஷமி-உல்ஹாக், 1990-களில் தரூம் உலேம் ஹக்கானியா என்ற அமைப்பையும், பாகிஸ்தானின் கைபர் பக்துன்வாலா பகுதிகளில் தலிபான் அமைப்பையும், மற்றும் ஆப்கானிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் உருவாக காரணமாக இருந்தவர் என கூறப்படுகிறது. கொலைக்கான காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து