ஆசியா பீபிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து கலவரத்தில் குதித்த பாக். மக்கள்

ஞாயிற்றுக்கிழமை, 4 நவம்பர் 2018      உலகம்
Asia Bibi 04-11-2018

இஸ்லாமாபாத்,பாகிஸ்தானில் ஆசியா பிபி வழக்கில் அவருக்கு வழங்கப்பட்டு இருந்த தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராக தற்போதுபாகிஸ்தானில் போராட்டங்கள் நடந்து வருகிறது.

பாகிஸ்தானை சேர்ந்தவர் கிறிஸ்துவ மத பெண் ஆசியா பிபி. இவர் கடந்த 2009 இறுதியில் இஸ்லாம் மதத்தையும், நபிகள் நாயகத்தையும் தவறாக பேசியதாக கைது செய்யப்பட்டார். அதன்பின் 2010-ல் இவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இவரது தூக்கு தண்டனை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.ஆசியா பீபி, கடந்த 2009-ல் வேலை பார்த்த அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் சண்டையிட்டுள்ளார். அவர் தண்ணீர் கேட்டதற்கு அவருடன் வேலை பார்த்த பெண்கள், அவர் கிறுஸ்துவர் என்பதால் தண்ணீர் கொடுக்க மறுத்துள்ளனர். இதையடுத்து ஆசியா பீபி நபிகள் நாயகம் குறித்து தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.

இதை பற்றி அந்த அலுவலகத்து பெண்கள் 2009 இறுதியில் அங்கிருக்கும் மத குருமார்களிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் மீது பின் வழக்கு தொடுக்கப்பட்டது. இவர் கடந்த 2009 இறுதியில் இஸ்லாம் மதத்தையும், நபிகள் நாயகத்தையும் தவறாக பேசியதாக கைது செய்யப்பட்டார். அதன்பின் 2010-ல் இவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கில் 2010-ல் இந்த தீர்ப்பை லாகூர் நீதிமன்றம் இந்த தூக்கு தண்டனையை உறுதி செய்தது. அதன்படி ஆசியா பிபிக்கு தூக்கு தண்டனை கொடுத்தது சரிதான் என்று தீர்ப்பு வழங்கியது. இது உலக நாடுகளுக்கு இடையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில் கடந்த 8 வருடமாக ஆசியா பீபி சிறையில் கஷ்டப்பட்டு வந்தார். ஆசியா பீபியின் கணவர் ஆசிக் மாஷா இதற்கு எதிராக வழக்கு தொடுத்து போராடி வந்தார். இதையடுத்து 2018-ல் இவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கடந்த வாரம் சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இதற்கு எதிராக தற்போது பாகிஸ்தானில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இவர் விடுதலை செய்யப்பட்டது தவறு என்று பாகிஸ்தானில் மக்கள் பலர் போராடி வருகிறார்கள். பல இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புகள் இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறது. கடந்த நான்கு நாட்களாக இந்த போராட்டங்கள் நடந்து வருகிறது. முக்கியமாக அந்த பெண் வெளிநாடு செல்ல தடை விதிக்க வேண்டும் என்று போராடி வருகிறார்கள். இது அங்கு பெரிய பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சில இடங்களில் அந்த பெண்ணின் உருவ பொம்மையை கூட எரித்து இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் அந்த பெண் வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு இருக்கிறார். லண்டனில் வசிக்க இவர் அகதி கோரிக்கை வைத்துள்ளார். அதேசமயம் இவருக்கு எதிராக மேல்முறையீடு செய்யவும் இஸ்லாமிய அமைப்புகள் முடிவெடுத்து இருக்கிறது.

Jallikattu 2019 | Alanganallur

Viswasam Review | Ajith | Nayanthara | Viswasam Movie review

PETTA MOVIE REVIEW | Petta Review | Rajinikanth | Vijay Sethupathi | Karthik Subbaraj | Anirudh

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5

Power of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்

குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து