முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகாயம்: சிறுமி பலி:

ஞாயிற்றுக்கிழமை, 4 நவம்பர் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கரிசல்பட்டி நான்கு வழி சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்தனர். இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 திருப்பூர் மாவட்டம் கோயம்பாளையம் சேர்ந்தவர் முருகையா .இவர் திருப்பூர் பனியன் நூற்பாலை வைத்துள்ளார்.இவர் தன்னுடைய மனைவி ஜெனிதா மகன் அபினேஷ்(11) மகள் ஹரிணி(7) ஆகிய நான்கு பேரும் திருப்பூரிலிருந்து திருநெல்வேலி மாவட்டம் கயத்தாறில் நடைபெற்ற உறவினரது சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றுள்ளனர். அப்போது திருமங்கலம் அருகே கரிசல்பட்டி நான்கு வழி சாலை மேம்பாலம் வரும்போது கார் திடீரென்று நிலைதடுமாறி சாலை நடுவிலுள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிறுமி ஹரிணி சம்பவ இடத்திலேயே பலியானார் .தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதில் படுகாயமடைந்த ஜெனிதா,அபினேஷ் ஆகிய இருவரையும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து பலியான சிறுமியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுப நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்து சிறுமி பலியான சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து