நான் தினகரனின் ஸ்லீப்பர் செல்லா? அமைச்சர் கடம்பூர் ராஜூ மறுப்பு

திங்கட்கிழமை, 5 நவம்பர் 2018      தமிழகம்
Kadambur Raju 05-11- 2018

விளாத்திகுளம்,டிடிவி தினகரனின் ஸ்லீப்பர் செல்லாக அமைச்சர் கடம்பூர் ராஜூ செயல்படுவதாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் குற்றச்சாட்டை அமைச்சர் கடம்பூர் ராஜூ மறுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம்விளாத்திகுளம் தொகுதியில் அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்கண்டேயன்,

கடம்பூர் ராஜூ ஸ்லீப்பர் செல்....அமைச்சர் கடம்பூர் ராஜூ ஏற்கெனவே சசிகலாவுடன் இணைந்து பணியாற்றியவர். சசிகலா மூலமாகத்தான் அமைச்சர் கடம்பூர் ராஜூ தேர்தலில் நிற்க சீட் பெற்றார். அதனால், அவர் அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் ஸ்லீப்பர் செல்லாக இருக்கிறார். அ.தி.மு.க.வில் இருப்பவர்களை அ.ம.மு.க.வுக்கு அனுப்பி விடுவதுதான் கடம்பூர் ராஜூவின் வேலை. கடம்பூர் ராஜூ மீது முதல்வரும் துணை முதல்வரும் நடவடிக்கை எடுப்பார்கள் எனத் தெரிவித்தார்.

பதில் சொல்ல விரும்பவில்லை....இந்நிலையில், மார்க்கண்டேயனின் இந்த குற்றச்சாட்டை அமைச்சர் கடம்பூர் ராஜூ மறுத்துள்ளார்.தூத்துக்குடியில் இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, மார்க்கண்டேயன் விரக்தியில் பேசுகிறார். அப்படிப்பட்ட நிலைமை இல்லை என்பது கட்சித் தலைமைக்கும் தொண்டர்களுக்கும் தெரியும். அதற்கு மேல் நான் பதில் சொல்ல விரும்பவில்லை எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து