முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளியை முன்னிட்டு கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு

திங்கட்கிழமை, 5 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,தீபாவளியை முன்னிட்டு கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீபாவளி கொண்டாடிய மோடி....கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில்  பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி கொண்டாடினார். பிரதமர் கடந்த ஆண்டு பாண்டிப்போரா மாவட்டத்தில் காஷ்மீரின் குரேஸ் துறைக்கு சென்று அங்கு படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். 2016-ம் ஆண்டு  பிரதமர் மோடி இமாச்சல பிரதேசத்தில்   தீபாவளியைகொண்டாடினார். 2015-ல், பிரதமர் மோடி அமிர்தசரில்  ராணுவ வீரர்களுடன்  சேர்ந்து தீபாவளி கொண்டாடினார்

கேதார்நாத்தில் மோடி....இந்த ஆண்டு கேதார்நாத்  செல்லும் பிரதமர் அங்கு தீபாவளியை கொண்டாடுகிறார்.  கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி 2 மணி நேரம் வழிபாடு செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2013 ஜூன் மாதம் ஏற்பட்டபுயலால் பாதிக்கபட்ட கேதார்நாத்தில் பல்வேறு மறு கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன  கேதார்புரி மறுகட்டமைப்புப் பணிகளை  பிரதமர் ஆய்வு செய்யவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. கேதார்புரி திட்டத்துக்கு பிரதமர் மோடி கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டினார்.

கட்டமைப்பு பணிகள் ஆய்வு....இந்நிலையில் பிரதமர் மோடி தனது கேதார்நாத் பயணத்தின் போது அந்த பணிகளை ஆய்வு செய்யவுள்ளதாகவும், பணிகளின் முன்னேற்றம் தொடர்பான கண்காட்சி மற்றும் குறும்படத்தை பார்வையிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் பிரதமர் மோடி பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்ற இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து