20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்: தினகரனும் - ஸ்டாலினும் பலமுறை ரகசியமாக சந்தித்து பேசி உள்ளனர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 5 நவம்பர் 2018      தமிழகம்
ops 05-11-2018

சென்னை,தி.மு.க. தலைவர் ஸ்டாலினும், தினகரனும் பலமுறை ரகசியமாக சந்தித்து பேச்சு நடத்தியிருக்கிறார்கள். என்று துணை முதல்வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஒ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -தி.மு.க. தலைவர் ஸ்டாலினும், தினகரனும் பல தடவை ரகசியமாகச் சந்தித்து பேசியுள்ளார்கள் என்று எங்களுக்குத் தொடர்ந்து தகவல்கள்வந்தவண்ணமிருக்கின்றன. திருவாரூர், திருப்பரங்குன்றம் உட்பட 20 சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் விரைவில் வரவுள்ளதையொட்டி அ.தி.மு.க.வின் சார்பில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். தேர்தல் பொறுப்பாளர்கள் முழுமையாக அடிப்படை பூர்வாங்க பணிகளைத் தொடங்கி அவர்கள் கடமையாற்றி வருகிறார்கள். நான் அறுதியிட்டு உறுதியாக சொல்கிறேன். இடைத்தேர்தல் நடைபெறும் 20 சட்டமன்ற தொகுதிகளிலும் எம்ஜிஆர் - ஜெயலலிதாவின் வெற்றி சின்னம் இரட்டை இலை சின்னம் உறுதியாக வெற்றிபெறும்.

பருவமழையை...ஏற்கனவே தென்மேற்கு பருவமழை அளவுக்கு அதிகமாக பெய்யததால் அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்யவும், எந்த இடத்திலும் பாதிப்பு இல்லாத வகையில் அரசு நல்லபல நடவடிக்கையை எடுத்தது. தொடர்ந்து வடகிழக்கு பருவமழையின் பாதிப்பு மிகஅதிகமாக இருந்தால் அதனையும் எதிர்கொள்ள அரசு பல்வேறு நடவடிக்கைகளைக் குறிப்பாக இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

20 தொகுதிகளிலும்...எந்தச் சூழ்நிலையிலும் 8 தொகுதி, 4 தொகுதி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசவில்லை. முழுமையாக அதி.மு.க. தேர்தல் களத்தில் போட்டியிட்டு 20 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்றும், வெற்றிபெற வேண்டியதற்காக அடிப்படை பூர்வாங்க பணிகளை அதி.மு.க. பொறுப்பாளர்கள் முன்னின்று நடத்தவேண்டும் என்றும் தேர்தல் நடைபெறும் அத்தனை தொகுதிகளிலும் உறுதியாக நாம் வெற்றிபெறவேண்டும் என்ற கருத்துக்களைத்தான் பதிவிட்டாரே தவிர நீங்கள் குறிப்பிடும் மன கணக்காக நான்கோ, எட்டோ, பதினெட்டோ இல்லை.

ஒத்த கருத்தோடு... கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை அழைப்பது எங்களுடைய பெருந்தன்மை. இதனை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் அவர்களின் மனநிலையைப் பொறுத்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அதி.மு.க. எந்தச் சூழ்நிலையிலும், எந்தத் தேர்தலாக இருந்தாலும், தனித்து நின்றுதான்வெற்றிபெறும் என்ற முடிவினை எடுத்திருக்கிறார்கள். எங்களின் ஒத்த கருத்தோடு கொள்கையோடு இணைந்து, வருகின்ற கட்சிகள் வந்தால் அவர்களுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவோம்.இவ்வாறு தெரிவித்தார்.

சுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways

Easy DIY Arts and Crafts | How to make Coffee cup base for kids with 13 Ice Cream Sticks | GArts - 1

Sarkar Review | Vijay | AR Murugadoss | Keerthy Suresh | A R Rahman | Sarkar Movie Review

Easy 30 minutes Milk kova recipe in Tamil | Milk kova seivathu eppadi | Paalkova recipe in Tamil

Manpaanai Meen Kulambu recipe in Tamil | Traditional Fish Curry | Gramathu Meen Kolambu

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து