முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விராட்கோலிக்கு பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து மழை

திங்கட்கிழமை, 5 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி,இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று தனது 30-வது பிறந்த தினத்தை கொண்டாடினார். இதையொட்டி ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளங்களில் பிறந்தநாள் தெரிவித்தனர்.

வாழ்த்து மழை...இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான விராட் கோலி நேற்று தனது 30-வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். விராட் கோலியின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது ரசிகர்கள் நேற்று ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வாழ்த்து மழைபொழிந்து வருகின்றனர்.

ஹரித்வாரில்... கிரிக்கெட் உள்பட பல்வேறு துறைகளின் பிரபலங்களும் விராட் கோலிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். விராட் கோலியின் வாழ்த்துச்செய்திகள், ட்விட்டரில் நிரம்பி வழிகின்றன.  விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் ஹரித்வாரில் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.அண்மையில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில், தொடர்ந்து மூன்று சதங்களை அடித்து அசத்திய விராட் கோலிக்கு, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டித்தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.சி வாழ்த்து...குறிப்பாக, ஐ.சி.சி தனது ட்விட்டர் பக்கத்தில் கோலி செய்த சாதனைகளை குறிப்பிட்டு அவருக்கு வாழ்த்தினை தெரிவித்துள்ளது. பி.சி.சி.ஐ கோலிக்காக வீடியோ ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து